கேதரா தேசத்து வெறிபிடித்த மனிதன் THE MANIAC OF GADARA லேன்டெக் உயர்நிலைப்பள்ளி, சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா 54-07-20A 1. [சகோதரன் போஸ் பேசுகிறார்-ஆசிரியர்.] ...? உங்களுக்கு நன்றி. நண்பர்களே, நீங்கள் விரும்பினால், உட்காரலாம். அது... இந்தப் பிற்பகலில் இங்கேயிருந்து, இங்கே என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் தேவ பிள்ளைகளின் முகங்களைக் காணும் படியாகவும், இந்தப் பிற்பகல் வேளையில் மறுபடியும் உங்களிடம் பேசும்படி கிடைத்த சிலாக்கியத்திற்காகவும் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய ஊழியத்தின் நாட்கள் எல்லாவற்றிலும் நான் எப்பொழுதும் நடத்தின ஆராதனைகளில் இதுவே எனக்கு உண்டாகிருந்த இரண்டாவது பிற்பகல் ஆராதனையாகும். வழக்கமாக மேலாளரும், அவர்களில் சிலரும் தான் பிற்பகல் ஆராதனைகளை நடத்துவார்கள். சகோதரன் ஜோசப் அவர்கள் சற்று முன்பு என்னை அழைத்த போது, அதுவரைக்கும் நான் இந்த ஆராதனைக்கு வருவேனா என்பதை உண்மையாகவே அறியாதிருந்தேன். திரு.மூர் அவர்கள் என்னிடம், ‘நீர் இன்று பிற்பகலில் பிரசங்கிக்க வேண்டியிருக்கும் என்பது உமக்குத் தெரியுமா? அப்படித்தான் நான் நினைக்கிறேன்’ என்று கூறினார். நான், ‘ஏன், அவர்களுக்கு யார் அறிவிப்புக் கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரிய வில்லை’ என்றேன். 2. அவர், ‘இன்று பிற்பகல் ஆராதனை உமக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே நீர் பிரயாணம் பண்ணி அங்கே போய் விடுவது நல்லது’ என்றார். ஆகையால் நாங்கள் இங்கே தூரமாக வரவேண்டியதாயிற்று. எனவே நான் கர்த்தருக்காக ஏதோவொன்றைச் செய்ய எந்நேரமும் நான்-நான் இங்கே இருப்பதற்காக மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன். எனக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைத்தது, எனவே ஒரு பிற்பகலில் வந்து பேசுவது எனக்கு வருத்தம் உண்டாக்குவதில்லை. நான் ஒரு பெரிய பேச்சாளன் அல்ல, எனவே நான் ஒருவிதத்தில் அதைச் செய்ய முயற்சிப்பதை, அல்லது பேச்சாளர்களில் ஒருவரின் இடத்தை எடுத்துக் கொள்ள முயற்சிப்பதை சிறிது வெட்கமாகவே உணருகிறேன். ஆனால் நான் எப்போதுமே என்னை உதிரி டயர் என்றே அழைத்துக் கொள்கிறேன். உங்களிடம் ஒரு காற்றுப் போன ஒரு டயர் இருக்கும் போது தான், நீங்கள் ஒரு உதிரி டயரை உபயோகிப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது நம்மிடம் காற்று போன எந்த டயரும் (flat) இல்லை. பாருங்கள், நாம்-நாம்-நாம் ஏராளமான ஊழியக்காரர்களை இங்கே பெற்றிருக்கிறோம். ஆனால் நான் - அவர்களோ இன்று இந்த உதிரி (spare) டயரை பொருத்தி வைத்திருக்கிறார்கள், ஒருக்கால் மறுபடியும் அதைக் கொண்டிருக்கலாம். 3. சகோதரன் ரையான் அவர்களே, அது ஏறக்குறைய சரிதானே? அது சரிதான் என்று நினைத்தேன். எனவே நாம் எல்லாரும் ஒரு சந்தோஷமான தேவ பிள்ளைகளின் பெரும் கூட்டமாக இருந்து, ஒருமித்து ஊழியம் செய்து கொண்டிருக்கிறோம். அவர்கள் இங்கே புத்தகங்களையும், கர்த்தருடைய தூதனானவரின் புகைப்படத்தையும் வைத்து இருக்கிறதைக் காண்கிறேன். நான்... மக்களே, நான் ஒரு புத்தக விற்பனையாளனோ, அல்லது ஒரு புகைப்பட விற்பனையாளனோ அல்ல. நான் அதைச் செய்வதில்லை. நாங்கள் இந்தப்புத்தகங்களை அவர்களிடம் கொடுக்கவே முயற்சிக்கிறோம், வெறுமனே, அது போன்று. நல்லது, இந்தப் புத்தகங்களைக் கொண்டு மனப்பூர்வமாக ஒரு காசாவது (penny) எப்பொழுதாகிலும் சம்பாதித்திருப்பேனா என்பதை நான் ஒருபோதும் அறியேன். ஏன்-? என்றால் ஏழை மனிதன் வந்து, அவனிடம் பணமே இல்லாதிருந்தாலும், அவன் எப்படியும் ஒரு புத்தகத்தை வாங்கிக்கொள்கிறான். அவன் அவைகளில் அநேகமானவ ற்றை, தூரமான இடங்களிலும் கொடுக்கிறான். அப்படியானால் அங்கே, அநேக... நீங்கள் அவைகளை கொஞ்ச லாபத்தில் விற்பனை செய்ய வேண்டியுள்ளது, அவைகளால் உங்களுக்கு நிறைய இழப்பும் ஏற்பட்டு விடுகிறது. 4. அவர்களில் சிலர், தாங்கள் சுற்றிலும் இருக்கும்போது, வெள்ளிக்காசை வைத்து இருக்கும் மீனைப் பெற்றுக் கொள்கிறார்கள். அங்கே நமது தேசமானது ஒருவிதத்தில்... வருடத்தின் இந்த நேரத்திலல்ல, எப்படியும் இந்த நேரத்திலல்ல, இது ஈரப்பதம் நிறைந்த நேரமாயுள்ளது, ஆனால் கொஞ்சம் ஈடுகொடுத்து நிற்க முடிந்தது. ஆனால் அது வழக்கமாக... நீங்கள் சராசரியாக புத்தகங்களை அச்சிடாமல் போகும் அளவுக்கு, நாங்கள் அதில் அதிக பணத்தை இழந்து விட்டோம். அவைகளை அச்சிடாமல் நிறுத்தி விடவும் கூட உங்களால் முடியாது. ஆனால் அந்தப் புத்தகங்களில் இருக்கும் செய்திக்காக அது இல்லாதிருக்குமானால், நான் அவைகளை வைத்திருக்கக்கூட மாட்டேன். நாங்கள் அவைகளை ஞாயிற்றுக் கிழமையில் விற்பனை செய்வதில்லை, ஏனென்றால் கர்த்தருடைய நாளில் விற்பனை செய்வதை நான் தவிர்த்து விடுகிறேன். நான் எப்போதுமே அவ்வாறு தான் செய்து வருகிறேன். அதெல்லாம் சரிதான் என்று நான் சொல்லவில்லை என்பதாக அல்ல. வழக்கமாக சகோதரன் பாஸ்வர்த் அவர்கள் எல்லா நேரமும் என்னிடம் வந்து, ‘ஜனங்களை நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற ஏதோவொன்றைத் தானே நீர் விற்பனை செய்து கொண்டிருக்கிறீர்’ என்பார். 5. நல்லது, நான்-நான், அது... அநேகமாக சகோதரன் பாஸ்வர்த் அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார். பாருங்கள்? ஆனால் அது ஒரு மூடநம்பிக்கை அல்ல, ஆனால் நான் இது வரை அவ்வாறு செய்யாமலே இருந்து வருகிறேன்; எனவே நான் அவ்வாறு செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை, எனவே அப்படியே அது போகட்டும் என்று விட்டு விடுகிறேன். இப்பொழுது, இந்தச் சிறிய புகைப்படத்தைக் குறித்து அதன் மேல் எழுதப் பட்டுள்ள சிறு விவரத்தை அவர்கள் உங்களிடம் கூறியிருப்பார்கள் என்று நினைக்கி றேன். அதைக்குறித்த புகைப்படத்தின் ஒரு பிரதி இதோ இந்தப்புத்தகத்தில் இருக்கிறது. பிறகு இந்த இதே தூதனானவரின் புகைப்படமும் கூட இப்புத்தகத்தில் உள்ளது. ஆனால் அது மிகவும் நம்பத்தகுந்ததாக இல்லை. அது அப்படியே ஒரு பத்திரிகை நிருபர் எடுத்த புகைப்படமாகும், அதுதான் இங்கேயுள்ளது. நீங்கள் கவனிப்பீர்களானால், குருடனைப் போன்று சற்றேறக்குறைய அவ்விதமாக தன்னுடைய தலையைத் தாழ்த்தியபடி இருந்த ஒரு மனிதன் அங்கேயிருந்தான். நான் அந்த இரவில், ஆர்கன்ஸாஸிலுள்ள கேம்டனில் நின்று பேசிக் கொண்டிருந்தேன். ஏறக்குறைய இந்த அரங்கத்தின் அளவுடைய ஒரு சபையார் அங்கே இருந்தார்கள், ஒருக்கால் ஏறக்குறைய மூவாயிரம் சொச்சம் ஜனங்கள் இருக்கலாம். அது ஒரு கூடைப்பந்தாட்ட தரை போன்றிருந்தது. அவர்கள் இரண்டு அல்லது மூன்று பால்கனிகள் (மேல் மாடங்கள்) அல்லது ஏதோவொன்றைக் கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன், அல்லது... எனக்கு மறந்து விட்டது; அது அநேக வருடங்களுக்கு முன்பு, ஏறக்குறைய ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்பு அது சம்பவித்தது. 6. நான் அப்படியே பேசிக்கொண்டிருந்தேன், நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டு இருந்தேனோ அதைக்குறித்து, கர்த்தருடைய தூதனைக் குறித்து, ஜனங்களிடம் பேசுவதை விட்டு என்னால் தாண்டிச் செல்ல முடியாதது போன்று தோன்றினது. அது அப்போது புதிதாக இருந்தது. தேவனுடைய இம்மகத்தான அசைவு அப்போது தான் தொடங்கியிருந்தது. ஜனங்கள் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள், அப்போது நான் நோக்கிப்பார்த்து, ‘நான் அதைக் குறித்து இதற்கு மேலும் பேச வேண்டியிருக்காது, இதோ அதுவே வருகிறது’ என்றேன். அது இவ்விதமாக கட்டிடத்தினூடாக ஜனங்களுடைய தலைகளுக்கு மேலாக எழும்பி வந்து கொண்டிருந்தது. நான் அங்கே நின்று கொண்டிருக்கையில், அது வந்து அமர்ந்தது, அப்போது அந்த பத்திரிகை நிருபர் அங்கே சில செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த திருவாளர் - எனது கரங்களைக் குலுக்குவதற்காக ஓடோடி வந்த அந்த ஊழியக்காரர், அவர் அப்படியே-அப்படியே அதே நிலைமையில் அங்கே அவரைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். அப்போது அவர் அப்படியே தன்னுடைய தலையைத் தாழ்த்தின போது, அது அப்படியே இவ்விதமாக வந்து அமர்ந்தது. பகுத்தறிதலுக்கான அபிஷேகம் அதற்கும் சற்று முன்பு தான் வந்திருந்தது. 7. அங்கேதான் அது இருந்தது; நீங்கள் அதைக் காணலாம். அதாவது... அது இங்கேயும் உள்ளது என்பது எனக்குத் தெரியும், ஏனென்றால் நான் அனேக தடவை அதைக் கண்டு இருக்கிறேன். ஆனால் அது ஒருபோதும் - ஒருபோதும் புகைப்படமாக எடுக்கப்பட வில்லை - எனவே அது இதோ இந்தப் புகைப்படத்தில் இருப்பது போன்று மிகவும் அதிகாரப்பூர்வமாயுள்ளது. இந்தப் புகைப்படம் என்னுடையது அல்ல. இது - இது டெக்ஸாஸைச்சேர்ந்த ஹூஸ்டனிலுள்ள டக்ளஸ் ஸ்டுடியோவுக்கு சொந்தமானது ஆகும், அது அமெரிக்க புகைப்பட கழகத்தின் ஒரு உறுப்பினராகும். ஒரு இரவில் ஒரு பாப்டிஸ்டு ஊழியக்காரரோடு ஒரு விவாதம் உண்டாகி இருந்தது, அவர் ஒரு விவாதத்திற்காக எனக்கு சவால் விட்டு, நான் ஒரு ஏமாற்றுப் பேர்வழியே அன்றி வேறு யாருமல்ல என்றும், நான் அந்தப் பட்டணத்தை விட்டே ஓடி விட வேண்டும் என்றும், மேலும் மற்றவைகளையும் கூறியிருந்தார். அதைக் கேட்பதற்காக அனேக ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஒன்று கூடியிருந்தனர். திரு. பாஸ்வர்த் அவர்கள் அவரை சவாலுக்கு அழைத்தார். அவர்கள் விவாதத்தை முடித்த பிறகு, நான் அங்கு வந்து, ஜெபித்து முடித்து வைப்பீர்களா என்று அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர், நான் சென்றேன். 8. நான், ‘அவர்கள் இந்தக் காரியங்களைக் குறித்து தர்க்கம் செய்ததற்காக நான் வருந்துகிறேன். கிறிஸ்தவம் என்பது ஒரு விவாதம் அல்ல; அது ஜீவிக்க வேண்டிய ஏதோவொன்று’ என்றேன். ‘நான் ஒருபோதும்...’ என்றேன். அந்த மனிதர் என்னை ஒரு சுகமளிப்பவன் என்று தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருந்தார். நான், ‘நான் ஒரு சுகமளிப்பவன் என்று ஒருபோதும் சொல்லவேயில்லை. என்னால் யாரையாவது சுகமாக்க முடியும் என்று நான் ஒருபோதும் கூறினதேயில்லை. தேவன் தான் சுகமளிப்பவர் என்றும், நான் வெறுமனே வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிற அவருடைய ஊழியக்காரன் தான் என்று நான் எப்போதுமே கூறினேன்’ என்றேன். நான், ‘சம்பவித்த காரியங்களையும், இனி சம்பவிக்கவிருக்கிற காரியங்களையும் புரிந்து கொள்ளவும், அக்காரியங்களை அறிந்து கொள்ளவும், அவைகளை என்னிடம் கூறவும் கூடியதான தேவன் இடமிருந்து கிடைக்கப் பெற்ற ஒரு-ஒரு தெய்வீக வரத்தையே நான் உரிமைகோருகிறேன்’ என்றேன். தொடர்ந்து நான், ‘அது விவாதத் திற்கு அப்பாற்பட்டது; அது எந்த நேரத்திலும் நிரூபிக்கப்பட முடியும்’ என்றேன். பாருங்கள், நான், ‘அது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. அது... நான் சத்தியத்தை மாத்திரமே பேசுகிறேன். தேவன் தவறான ஒரு காரியத்தை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார் என்பதை எவரும் அறிவர். அவர் தவறான ஒரு காரியத்தோடு எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ள மாட்டார்’ என்றேன். அது அனேக அனேக வருடங்களுக்கு முன்பு சம்பவித்தது. நான், ‘ஆனால் நீங்கள் சத்தியத்தைப் பேசுவீர்களானால், தேவன் அந்த சத்தியத்தை ஏற்றுக்கொண்டு - அதை கனம் பண்ணுவார். அவர் அவ்வாறு செய்வதாக கூறியுள்ளார். அவர் சத்தியத்தைக் கனம் பண்ணுவார். நான் சத்தியத்தைப் பேசினால், தேவன் எனக்காகப் பேசுவார்’ என்றேன். 9. இதோ அவர் அனேக அனேக ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு முன்பாக வந்தார், அதற்கு மேல் நான் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கவில்லை. அப்போது அவர்கள் அதைப் புகைப்படம் எடுத்தனர், அதோ அது இருக்கிறது. அதன் பிறகு கைரேகை மற்றும் ஆவணங்களைப் பரிசோதிப்பதில் உலகத்திலேயே மிகச் சிறந்தவர்களில் ஒருவராகிய ஜார்ஜ் ஒ.லேஸி அவர்கள் அந்த கேமராவையும், அந்த இடத்தையும், மற்றும் யாவற்றையும், அந்த நாளையும் எடுத்து... அவர் இரண்டு மூன்று நாட்களாக அவை எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்து, அது இரண்டு முறை படமாக்கப்பட்டதா (double exposure) அல்லது ஏதோவொன்றா என்று பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எல்லாவிதமான வெளிச்சங்கள், வேதியியல் செயல்பாடுகள் மற்றும் அதைப் போன்ற வற்றையும் கொண்டு அதைச் செய்து முடித்தார். அவர் அதற்காக இங்கேயிருக்கும் எல்லாவற்றையுமே செய்தார். பிறகு ஒளியானது அந்த லென்ஸில்-பட்டது என்றும், இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன் தான் அங்கே இருந்தது என்றும் அவர் கூறினார். முழு உலகத்திலும் ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஜீவனானது புகைப்படமாக எடுக்கப்பட்டு, முற்றிலும் விஞ்ஞானப்பூர்வமாக எப்பொழுதா கிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றால், அது இது தான் முதலாவது ஒன்றாகும். இப்பொழுது, உங்களுக்கு விருப்பமானால், நீங்கள் வாஷிங்டனுக்குப் போய் (பார்க்கலாம்). 10. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, அவர்களிடம் அந்தப் புகைப்படம் இருந்தது என்றும், அந்தப் புகைப்படம் யாரோ ஒருவரால் எடுக்கப்பட்டது என்றும், அதில் இயேசு தம்முடைய கரங்களை நீட்டிக்கொண்டிருந்தார் என்றும், அப்போது இரண்டு விமானங்கள் வந்து கொண்டிருந்ததாகவும் கூறினார்கள் என்பதை நீங்கள் எல்லாரும் கவனித்திருப்பீர்கள். அதை அந்தச் செய்தித்தாளில் கண்டீர்கள். ஆனால் அந்த மனிதன் அதை ஒப்புக் கொண்டார்: அவர் தான் அந்தப் படத்தை வரைந்தார். அதுவோ அவ்வாறு இருக்கவில்லை. நீங்கள் பாருங்கள்? அவர் அதை ஒப்புக் கொண்டார்; அது அவ்வாறு இருக்கவில்லை என்று ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அன்பு கிறிஸ்தவனே, இங்கேயுள்ள இந்தப் புகைப்படமோ, அது நான்-நான்-நான் அதில் இருக்கிறேன் என்ற காரணத்தினால் அல்ல... அது நானல்ல. நான் அப்படியே அங்கு நின்று கொண்டிருக்க நேர்ந்தது; அவ்வளவு தான், எனவே... ஆனால் அது இயற்கைக்கு மேம்பட்ட ஒரு ஜீவனுடைய புகைப்படமாகும். என்னுடைய அபிப்ராயத்தின்படி, நீங்கள் கவனிப்பீர்களானால், அது ஒரு அக்கினிஸ்தம்பமாகும். இது நிரூபிக்கப்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பும்கூட என்னுடைய புத்தகங்களுக்குத் திரும்பிப் போய், அது அங்கே மீண்டும் மீண்டுமாக தோன்றியிருக்கிறது என்பதை நினைவுகூருங்கள். 11. அந்தச் சிறு புத்தகத்தைப் பாருங்கள், நான் எழுதின முதலாவது புத்தகமாகிய, ‘இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்’ என்று அழைக்கப்படும் அந்தப் புத்தகத்தைப்பாருங்கள், எப்படியாக லூயிவில், கென்டக்கியினு டைய பெரிய செய்தித்தாள்களும் மற்றும் எல்லாமும், ‘உள்ளூர் பாப்டிஸ்ட் ஊழியக்காரர் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, அவர் மேல் ஓர் விசித்திரமான ஒளி தோன்றியது’ என்று செய்தி வெளியிட்டன. அங்கே குறைந்தது 10,000 பேருக்கு முன்பாக, இக்காரியம் சம்பவித்துக் கொண்டிருக்க, அவர் அங்கே நின்று கொண்டு என்னிடம், ‘கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டது போல, உன்னுடைய ஊழியமும் இருக்கும்; உன்னுடைய ஊழியம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை காட்சியில் கொண்டு வரும்’ என்றார். 12. அங்கே... அது எதைக் குறித்து கூறிக் கொண்டிருந்தது என்பது கூட எனக்குத் தெரியவில்லை, அதைக் குறித்து எதுவுமே எனக்குத் தெரியாதிருந்தது. ஆனால் அதுவோ இன்று முன்னேறிச் சென்று கொண்டிருப்பதைக் கவனியுங்கள். பாருங்கள். அதோ அது அதையே செய்திருக்கிறது. எழுதப்படிக்கத் தெரியாத, ஏழாம் வகுப்பு படிப்பைக் கொண்டு என்னால் எவ்வாறு அதைச் செய்ய முடிந்தது, நான்... நான் அக்காலத்தில், நான் வேதாகமத்தை வாசிக்க முயற்சித்த போது, என்னால் அதை வாசிக்கவே முடியவில்லை. எனது மகனுடைய தாயாகிய, நான் விவாகம் செய்த பெண் தான் மேடையில் உட்கார்ந்து, என்னுடைய மூல பாடத்திற்காக (text) வேதாகமத்தை வாசிப்பாள், ஏனென்றால் வேதாகமத்தைக் கூட என்னால் வாசிக்க முடியாதிருந்தது (அது உண்மை), அதை வாசிக்கக் கூட முடியாதிருந்தது. 13. நான்... என்னுடைய முதலாவது செய்தி எனக்கு நினைவிருக்கிறது. நானாகவே முயற்சித்த முதலாவது செய்தியானது, அந்தச் சிறிய உள்ளூர் பாப்டிஸ்ட் சபையில் தான் அதைப் பிரசங்கித்தேன் என்று நம்புகிறேன். அப்போது நான், ‘வல்லமைமிக்க மனிதனாகிய சிம்சோன்’ என்பதன் பேரில் பிரசங்கம் பண்ணினேன் என்று நம்புகிறேன். நான் ஒரு பிரசங்கத்தை நானாகவே முயற்சித்து, ‘நல்லது, நான் அதைச் செய்து முடிக்கையில், அதை அப்படியே பிரசங்கிக்க முயற்சிப்பேன்’ என்று நினைத்துக் கொண்டேன். அது யோவான்.... 14. நான், ‘தேனே, வாசி’ என்றேன். அவள், ‘உங்கள் இருதயங்கள் கலங்காதிருப்பதாக’ என்றாள். உடனே நான், ‘அது என்ன கூறுகிறது என்று கேட்டீர்களா’ என்றேன். அதன் பிறகு, ‘தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாய் இருங்கள்’ என்றாள். உடனே நான், ‘நீங்கள் அதைச் செய்வீர்களா?’ என்று கேட்டேன். அப்படியே அவள்... அந்த விதமாகத்தான் நான் என்னுடைய முதலாவது செய்தியைப் பிரசங்கம் பண்ணினேன். சகோதரன் ரையான் அவர்களே, உங்களுக்கு ஏறக்குறைய அந்த நாட்கள் நினைவிருக்கும், அது நடந்த அந்த நாட்கள். ஆனால் இப்பொழுது, நண்பர்களே, இருப்பினும் நான் இன்னுமாக போக வேண்டிய நீண்ட தூர பிரயாணத்தை உடையவனாயிருக்கிறேன், ஆனால் நானோ இன்னும் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறேன். அந்நாளில் அங்கே ஆற்றண்டையில் பிரத்தியட்சமான அதே கர்த்தராகிய இயேசுவின் புகைப்படம் தான் அதோ உள்ளது. (ஒரு இரவுக்கு முன்பு பிரத்தியட்சமான ஒளியைக் குறித்து ஒரு மனிதர் சாட்சி கொடுக்கிறார் - ஆசிரியர்.) ஆமாம், அது... உங்களுக்கு நன்றி. இப்பொழுது, யாரோ ஒருவர், ‘சகோதரன் பிரன்ஹாமே, சகோதரன் போஸ் அவர்கள் உடைய சாட்சி உண்மை என்று நினைக்கிறீர்களா?’ என்று கேட்கலாம். முற்றிலும் உண்மை. ‘நல்லது அப்படியானால், அது எப்படி முடியும்... நானும் கூட இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தும், நான் அதைக் காணவில்லையே.’ அது உண்மை. நீங்கள் சரியாக அங்கு அமர்ந்து கொண்டிருந்தாலும், அது முற்றிலும் சாத்தியமே, ஒருக்கால் இரண்டு... உங்களுடைய ஏதாவது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒருவரால் அதைக் காண முடிந்து, உங்களால் அதைக் காண முடியாமல் இருக்கலாம். 14. வான சாஸ்திரிகளை (wise men) வழிநடத்தின அந்த நட்சத்திரத்தைக் கவனித்துப் பாருங்கள். அது ஒவ்வொரு வானிலை ஆய்வுக்கூடங்களையும் மற்ற எல்லாவற் றையும் தாண்டிச் சென்றது, ஆனாலும் அவர்களைத் தவிர வேறு எவரும் அதைக் காணவில்லை. அதைக் காணும்படியாக அவர்களுக்குத்தான் அருளப்பட்டது. பவுல் தமஸ்குவுக்குப் போகும் பாதையில் இருந்த போது, அந்தத் தரிசனத்தைக் கண்டு, அவன் தன்னுடைய குதிரையை விட்டு நிறுத்தப்பட்டு, அவனுடைய குதிரை அல்லது அது என்னவாயிருந்தாலும் அதை விட்டு விழுந்த போது, பவுலைக் கவனித்துப் பாருங்கள். புரிகிறதா? பாருங்கள், அதைக் காணும்படியாக சிலருக்கு அருளப்பட்டது, சிலரால் அதைக் காண முடியவில்லை. அது முற்றிலும் சரியே. எனவே நாம் எல்லாரும் மகிமையை அடைந்து, அந்த நாட்கள் முடியும் போது... நான் இந்த விவரணத்தைக் கூறப் போகிறேன். நான் இதை என்னுடைய முழு இருதயத் தோடும் விசுவாசிக்கிறேன். எகிப்திலிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேல் புத்திரர்களை வழிநடத்தின ஒரு அக்கினிஸ்தம்பமாக அது இருந்தது என்று நாம் வேதத்தில் வாசி - வாசிக்கிறோம். அது சரிதானா? அந்த அக்கினிஸ்தம்பம் தான் உடன்படிக்கையின் தூதனாக இருந்தது. போதகர்களே, அது சரி தானா-? உடன் படிக்கையின் தூதன் யார்? அவர் தான் இயேசு கிறிஸ்து. 15. அப்படியானால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அது சரி தானா? அதற்கு என்ன அர்த்தம்? அது இன்னும் சபையை வழிநடத்திக் கொண்டு இருக்கிறது. அவர் தான் உடன்படிக்கையின் தூதனானவர். அந்த உடன்படிக்கையானது அவருடைய சொந்த இரத்தத்தைக் கொண்டு எழுதப்பட்டது, அவர் தம்முடைய சொந்த இரத்தத்தை எடுத்துக் கொண்டு (packing), பிதாவினுடைய சமூகத்திற்குள் சென்றார். அது சரிதானா? இப்பொழுது இது அதே பரிசுத்த ஆவி தான். அவர்கள் சொன்னார்கள்... ஜார்ஜ் ஒ. லேஸி அவர்கள், ‘அது ஒரு மரகத நிற ஒளியைப் போன்று காணப்பட்டது, அது பற்றி எரிந்து கொண்டு மேலும் கீழுமாக அசைவாடுகிற சுடரொளியைப் போன்று காணப் பட்டு, அது இவ்விதமாக சுற்றி சுற்றி சுழன்று கொண்டிருந்தது. அது சுற்றிச் சுழலுகிற ஒரு வட்டத்திற்குள் போய்க் கொண்டிருப்பதைப் போன்று காணப்பட்டது’ என்றார். இப்பொழுது அது, அது ஏறக்குறைய அவ்வளவு பெரியதாகவும், அநேகமாக அவ்வளவு அடர்த்தியாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. உண்மையில் ஒவ்வொரு இரவும் நான்... இப்பொழுது, வெளிப்படையாகக் கூறினால், நாம் - நான் இன்று மரித்துக் கொண்டு இருக்கும் மனிதர்களுக்கு, மரித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனாக பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கையில், நான் இதை இப்பொழுது உங்களிடம் கூற முடியும், நான்... அது நான் இப்பொழுது இருக்கும் இடத்திலிருந்து ஐந்து அடி தூரத்திற்குள் தான் நின்று கொண்டிருக்கிறது. அது உண்மை. 16. இப்பொழுது, இரவு நேரத்தில் அது எவ்விதம் சம்பவிக்கிறது என்றால், நான் அப்படியே என்னையே அதற்கு சமர்ப்பித்து விடுகிறேன், அவர் தான் அதைச் செய்வதற் கான ஒரு வழியை வைத்திருக்கிறார், என்னை நானே சமர்ப்பிக்கும் போது, அதற்கு மேலும் அது நானல்ல. அதற்கு மேல் அதுவாகவே இருக்கிறது. பாருங்கள்? நான் வெளியே போய், அது உள்ளே வருகிறது. அதனால் நீண்ட நேரம் என்னிடத்தில் தரித்து இருக்க முடியாது, ஏனென்றால் நான் - அது அப்படியே - என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியாது. ஆனால் பிறகு அது மீண்டுமாக அசைவாடும். அது எனக்கு அருகில், ஏதோவொரு இடத்தில் நின்று கொண்டிருக்கிறது என்பதை என்னால் கூற முடியும். அதன் பிறகு நான் நோயாளியிடம் பேசிக் கொண்டிருப்பேன், பிறகு ஒருக் கால் அது அவ்விதமாக வருவதை மறுபடியும் உணருவேன்; அது அப்படியே என் மேல் இறங்கி வரும். அப்போதுதான் தரிசனங்களைக் காண்கிறேன். பிறகு அது மீண்டுமாக தூரமாகச் சென்று விடும். பிறகு நானே பேசிக் கொண்டிருப்பதை என்னால்-என்னால் கேட்க முடியும், ஆனால் என்ன சொல்லப் போகிறேன் என்பதே எனக்குத் தெரியாது. மேலும் நான்... அப்போது அவ்விதமாகத்தான் அது சம்பவிக்கிறது. 17. நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். எல்லாருமே அதை விசுவாசிக்க வேண்டுமென்று நான் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் கர்த்தராகிய இயேசுவையும் கூட விசுவாசிக்கவில்லையே, எனவே ஒவ்வொருவரும் அதை விசுவாசிக்க வேண்டும் என்று என்னால்-என்னால்-என்னால் எதிர்பார்க்கவே முடியாது. ஆனால் சத்தியத்தைக் குறித்து மாத்திரமே என்னால் சாட்சி கொடுக்க முடியும். கிறிஸ்தவ நண்பர்களே, இன்றைக்கு நான் இந்த உலகத்தை விட்டுப்போனால், என்னுடைய சாட்சி உண்மையாயுள்ளது. உண்மையில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கண்களால் அதைக் கண்டுள்ளனர். உலகம் முழுவதும் இருக்கிற சபையானது அதனுடைய ஊழியத்தை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது, என்னுடைய ஊழியத்தை அல்ல, அதனுடைய ஊழியத்தை, அது எவ்வளவாய் செய்யப்பட்டிருக்கிறது, எப்படியாக அது செய்யப்பட்டிருக்கிறது, ஆயிரக் கணக்கானோர் ஆசிர்வதிக்கப்பட்டு, இன்று அக்கினியாக உலகத்தின் ஒருமுனை முதற் கொண்டு மறுமுனை மட்டும் தேவனுக்காக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அது சரியே. அது அதைச் செய்து விட்டது. அது அவ்வண்ணமே இருக்கிறது என்பதைத் தவிர வேறு எதையும் விஞ்ஞான உலகத்தினால் கூற முடியவில்லை. அது சரியாக அங்கே ஒரு- ஒரு... ஜார்ஜ் ஒ. லேஸி அவர்கள் அந்தப் புகைப்படத்தை சமர்ப்பித்த பிறகு, தாம் அடிக்கடி அதைக் குறித்து கூறியிருந்ததாகவும்; என்னுடைய கூட்டங்களைக் குறித்து கேள்விப்பட்டு இருந்ததாகவும், ஜனங்கள் அதைக்குறித்து கூறுவதை அவர் கேள்விப்பட்டிருப்பதாகவும், அது மனோசாஸ்திரம் தான் என்று அவர் கூறினதாகவும் சொன்னார். பிறகு அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தபோது, ‘ஆனால் புகைப்படக்கருவியின் இயந்திரக் கண் மனோ சாஸ்திரத்தைப் புகைப்படம் எடுக்காது’ என்று கூறினார். அது உண்மை. புகைப்படக்கருவியின் இயந்திரக்கண் மனோசாஸ்திரத்தைப் புகைப்படம் எடுக்காது. 18. எனவே விஞ்ஞான உலகமானது அது சத்தியம் என்பதை கூற வேண்டியதாயிற்று. இப்பொழுது, நாம் ஒருக்கால் கல்வியறிவற்ற ஒரு கூட்டம் ஜனங்களாக இருக்கலாம். அது சரி தான். நான், நானும் படிப்பறிவில்லாதவன் என்று எனக்குத் தெரியும். ஆனால் இங்கே ஒரு காரியம்... நான்-நான்-நான் தேவனிடத்தில் தயவு பெற்றிருக்கவே அதிகம் விரும்புவேன், ஒரு பரிசுத்த உருளையன் என்றோ, அல்லது மதவெறியன் என்றோ, அல்லது அவர்கள் அழைக்க விரும்புகிற எதுவாக இருந்தாலும், சிகாகோ பெற்றிருக்கிற செல்வங்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும் அல்லது உலகம் பெற்றிருக்கிற எல்லா மகிமையைப் பார்க்கிலும், அவர் இன்று பிற்பகலில் இங்கே நின்று கொண்டிருக்கிறார் என்பதை அறியும்படியாக தேவனிடம் தயவு பெற்றிருக்கவே அதிகம் விரும்புகிறேன். நான் இப்பொழுது இங்கே இந்தப் புகைப்படத்தைப் பிடித்துக் கொண்டு, இது என்ன என்று உங்களிடம் கூறவும், அவர் சரியாக நான் இப்பொழுது நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து இதோ ஐந்து அடி தூரத்திற்குள் தான் நின்று கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டவனாயும் நிற்பதையே அதிகம் விரும்புகிறேன். நான் இந்த உலகம் முழுவதிற்கும் பத்து இலட்சம் வருடங்கள் இராஜாவாக இருப்பதைக் காட்டிலும், சரியாக இப்பொழுது நான் கொண்டிருக்கிற இந்த உணர்வையும், இந்த ஆறுதலையும் கொண்டிருப்பதையே அதிகம் விரும்புகிறேன். அது உண்மை. 19. இப்பொழுது, நான் சந்தோஷமாயிருக்கிறேன். எனக்குக் களைப்பாயுள்ளது. நான் சரீரபிரகாரமாக களைப்படைந்திருக்கிறேன். ஒரு சாதாரண மனிதனுக்கு இல்லாத கஷ்டங்களும் காரியங்களும் எனக்குண்டு. எப்படியாக சாத்தான் இரவும் பகலும் எல்லா நேரமும் என்னோடு சண்டையிடுகிறான் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். அந்தப் பிசாசுகளைத் துரத்தும் போது, அவைகள் உங்களைச் சுற்றி சுற்றி வந்து கொண்டேயிருக்கும். உங்களுக்குப் புரிகிறதா? ஆனால் அங்குள்ள அந்தக் காரியங்கள் எல்லாம்... எனக்கு ஒரு யுத்தம் உண்டு, யாருமே அதைக் குறித்து அறிய மாட்டார்கள். ஆனால் நான் ஜனங்களை நேசிக்கிறேன். நான் அவர்களை என்னுடைய முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். எனவே, அது ஜனங்களுக்குத் தெரியும். என்னுடைய ஊழியம் ஒரு பெரிய நிலைக்கு வருவதை, அது பெரியதாய் காணப்படும் நிலைக்கு வருவதை நான் ஒருபோதுமே அனுமதிக்கவில்லை. அது நிச்சயமாக - அது நிச்சயமாக என்னுடைய மேலிடத்திற்குத் தான் போயாக வேண்டும். என்னுடைய ஊழியமானது தொடர்ந்து அற்பமாகவே இருந்து வருகிறது. நான் ஒரு சில ஜனங்களோடு இடைபடுவேன், ஏறக்குறைய அந்த நேரத்தில் கூட்டம் பெருகிக் கொண்டே வரும், பிறகு நான் வேறு ஏதோவொரு இடத்திற்குப் போய் விடுவேன், அப்படியே வேறு ஏதோவொரு இடத்திற்குப் போகிறேன். ஏனென்றால் என்னுடைய - என்னுடைய நோக்கம் முழுவதும் என்னுடைய பரலோகப் பிதாவைப் பிரீதிப்படுத்துகிறதாகவே இருக்கிறது. அவரைப் பிரீதிப்படுத்துகிற அதை மாத்திரமே நான் செய்ய வேண்டியவ னாயிருக்கிறேன். 20. உங்கள் எல்லாருடைய ஜெபமும் எனக்கு-எனக்குத் தேவை. அதுதான் எப்போதுமே என்னுடைய நோக்கமாக இருக்கிறது, கர்த்தர் என்னைச் சிறியவனாகவே வைத்து இருக்கிறார். பாருங்கள். அந்த... அது... அவர் என்னை உபயோகிக்கக் கூடியதான இடத்தில், அங்கே தான் என்னால் இருக்க முடியும். அவர்... அந்த ஒரு இடத்திற்குப் (போகவே) நான் விரும்புகிறேன். தூதர்கள் ஒன்றாகக் கூடிவரும்போது, அவர், ‘நல்லது, என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் பிரன்ஹாம் என்னைக் குறித்து தான் அக்கறை எடுத்துக் கொள்கிறான் என்பது எனக்குத் தெரியும்’ என்று அவரால் கூற முடியும். அது - அதைத் தான் நான் - அவர் அதைச் செய்ய வேண்டும் என்பது தான் எனக்கு விருப்பம். பிறகு அந்த நாளில்... நான் அடிக்கடி வியப்படைவதுண்டு... அவர் தமது கரங்களை நீட்டி, ‘வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்களெல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று கூறின போது, அந்த நாளில் நான் அங்கே நின்று கொண்டிருக்க விரும்பினேன். நான் அனேகமாக ஒருபோதும் அவர் அவ்வாறு கூறுவதைக் கேட்க மாட்டேன், ஆனால் அங்கே ஒரு காரியத்தைக் கேட்கும்படி எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன், அவர் ஏதோவொரு நாளில், ‘என்னுடைய நல்ல உண்மையான ஊழியக்காரனே, நீ நன்றாகச் செய்தாய்’ என்று கூறுவதைக் கேட்பதையே எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். 21. அது - அந்தச் சத்தத்தைக் கேட்கவே நான் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன். அவர் தமது இராஜ்யத்திற்குள் மாத்திரம் என்னைப் போக அனுமதிப்பாரானால், அப்பொழுது அவருடைய புனிதமான கால்கள் அல்லது அவ்விதமான ஏதோவொன்றின் மேல் என்னுடைய கரங்களை வைக்கக் கூடிய அளவுக்கு நான் நெருங்கி மேலே செல்வேன், அது சரியாகவே இருக்கும். என்னால் அவரைக் காண முடியுமானால்... இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் வியாபார புருஷர்களின் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அது சரியாக இங்கே சிகாகோவில் தான் என்று நம்புகிறேன். தெற்கில் ஒரு வயதான கறுப்பின மனிதன்... அவன் ஒரு இரவில் இரட்சிக்கப்பட்டான். அடுத்த நாள் காலையில் அவன் வெளியே (சென்று), ‘நான் விடுதலையாகி விட்டேன்; நான் விடுதலை அடைந்து விட்டேன்’ என்று மற்ற அடிமைகள் எல்லாரிடமும் கூறிக் கொண்டிருந்தான். அந்த அடிமைகள், ‘அது எப்படி...’ என்று கேட்டு, என்ன நடந்தது என்று அறிய விரும்பினார்கள். அவர், ‘கர்த்தராகிய இயேசு என்னை விடுதலையாக்கி விட்டார்’ என்றான். அந்த அடிமைகளின் சொந்தக்காரர் அங்கே வந்து, ‘சரி, சாம்போ, உன்னுடைய வேலையைப் பார்’ என்றார். அவன், ‘சரி, எஜமானே, நான்--நான் நேரம் எதையும் (வீணாக) செலவழிக்கக் கருதவில்லை’ என்றான். ‘நீ விடுதலையாகி விட்டாய் என்று நீ கூறுவதாகக் கேள்விப்படுகிறேனே’ என்றார். அவன், ‘ஆம், ஐயா, எஜமானே. சென்ற இரவில் கர்த்தராகிய இயேசு என்னை பாவ பாரத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி விட்டார் (அந்த அர்த்தத்தில் தான் கூறுகிறேன்)’ என்றான். அவர், ‘நல்லது, சிறிது நேரம் கழித்து நீ என்னுடைய அலுவலகத்திற்கு வர விரும்புகிறேன்’ என்றார். சற்று கழிந்து அவன் அலுவலகத்திற்கு வந்தான். அவர், ‘நீ அதை மீண்டும் கூற விரும்புகிறேன். சென்ற இரவு கர்த்தராகிய இயேசு அந்தக் கூட்டத்தில் வைத்து உன்னை விடுதலையாக்கினதாக என்னிடம் கூறினாயே, அப்படியானால் நீ இதற்கு மேலும் பாவத்திற்கு அடிமை இல்லையா?’ என்றார். 22. அவன், ‘ஆமாம், ஆமாம், எஜமானே, அவர் தான் என்னை விடுதலையாக்கினார். அவர் சென்ற இரவு பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் என்னை விடுதலையாக்கி விட்டார்’ என்றான். அவர், ‘அப்படியானால், சாம்போ, சென்ற இரவில் இயேசு கிறிஸ்து உன்னை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையாக்கியிருந்தால், நீ அடிமையாய் இருப்பதிலிருந்து நானும் உன்னை இன்றே விடுதலை பண்ணுகிறேன் (அது உண்மை). எனவே நீ உன்னுடைய சகோதரர்களுக்குப் பிரசங்கிக்கலாம்’ என்றார். அந்த வயதான மனிதர் அனேக அனேக வருடங்கள் பிரசங்கித்தார். பிறகு அவர் ஒரு வயோதிப மனிதராக மரிக்க ஆயத்தமான போது, அவர் எல்லாரையும் உள்ளே அழைத்தார்... அவருடைய அநேக வெள்ளைக்கார சகோதரர்கள் அவரைக் காணும்படி வந்திருந்தனர். அப்போது அந்த வயதான மனிதர் சுயநினைவிழந்து கோமா நிலைக்குப் போய் விட்டிருந்தார். அவர் மரித்து விட்டாரோ என்று அவர்கள் நினைத்தனர். சற்று கழிந்து அவர் சுற்றும் முற்றும் நோக்கி, அங்கே அவர்கள் எல்லாரும் நிற்பதைக் கண்டார்; அவர் மறுபடியும் அவர்கள் எல்லாரையும் வாழ்த்தினார். அவர், ‘ஓ, நான் சற்று முன்பு தான் உள்ளே போயிருந்தேன். நான் ஏன் திரும்பி வந்து விட்டேன்? நான் வாசலினுள்ளே நின்று கொண்டிருந்தேனே. நான் நின்று நோக்கிப் பார்த்த போது, ஒரு தூதன் என்னிடம் வந்து, ‘சாம்போ, உன்னுடைய கிரீடத்தையும் உன்னுடைய வெகுமதியையும் பெற்றுக் கொள்ள இப்பொழுது நீ ஆயத்தமாய் இருக்கிறாயா?’ என்று கேட்டான்’ என்றார். அவர், ‘கிரீடமா, பரிசா? கிரீடத்தையும் பரிசையும் குறித்து என்னிடம் பேச வேண்டாம். எனக்கு அவைகள் தேவையில்லை. நான் அப்படியே நின்று ஆயிரம் வருடங்கள் அவரைப் பார்த்துக் கொண்டேயிருக்கட்டும்; அதுதான் என்னுடைய கிரீடமும் பரிசும்’ என்றாராம். 23. இந்தப் பிற்பகல் வேளையில், அவ்விதமாகத்தான் நாம் எல்லாரும் உணருகிறோம் என்று நினைக்கிறேன். பரிசுகளைக் குறித்து எனக்குக் கவலையில்லை. அரைகுறை யாகக் கட்டப்பட்ட ஒரு சிறு குடிசையோ அல்லது எனக்கு என்ன இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. இன்று இங்கேயிருக்கிற காணக்கூடாதவராகிய (unseen One) அவரையே நான் பார்த்துக் கொண்டிருக்கட்டும், ஜீவியத்தின் மற்ற எல்லாமும்... ஏதோ ஓரு நாளில் நான் அவரைக் காண முடியும் என்று நான் நினைக்கும்போது, மற்ற எல்லா காரியமும் மிகவும் அற்பமாகவே தோன்றுகின்றன. 24. நாம் வழக்கமாக சபையில் ஒரு பழைய பாடலைப் பாடுவதுண்டு: ஓ, அவரைக் காண விரும்புகிறேன், அவருடைய முகத்தை நோக்க விரும்புகிறேன், அங்கு என்றென்றும் அவருடைய இரட்சிப்பின் கிருபையைப் பாட; மகிமையின் வீதிகளில் என் சத்தத்தை நான் உயர்த்தட்டும்; கவலைகள் எல்லாம் கடந்த பிறகு, முடிவில் வீட்டுக்குச் சென்று, எப்பொழுதும் களிகூருவேன். இன்று பிற்பகலில் நாம் அவ்விதமாகத்தான் உணருகிறோம். இங்கே இந்தப் பிற்பகலில், சிகாகோவில் இருந்து, என்னுடைய சகோதரர்களை இங்கே வெளியே இந்தக் கூட்டத்திற்குக் கொண்டு வர முயற்சிக்கையில், அதுவே என்னுடைய நோக்கமாய் உள்ளது... அவருடைய பிரசன்னம் இங்கேயிருப்பதை அறிந்த பிறகு, அவர்கள் அவரை விசுவாசிக்கச் செய்ய முயற்சிப்பதே எனது நோக்கம். 25. இப்பொழுது, நான் ஒருக்கால் சகோதரன் ஜாகர்ஸ்ப் போலவோ, அல்லது சகோதரன் ராபர்ட்ஸ்ப் போலவோ, அல்லது பில்லி கிரஹாமைப் போலவோ, அல்லது அந்த மனிதர்களில் சிலரைப் போலவோ ஒரு வல்லமைமிக்க பேச்சாளராக இருக்க விரும்புகிறேன், அங்கே அவர்கள் போய் தங்கள் செய்தியைப் பிரசங்கம் பண்ணி விட்டு, வீட்டிற்குப் போய் விடுகிறார்கள், அப்போது அது முடிந்து விடுகிறது. என்னால் அவ்வாறு செய்ய முடியாது; நான் ஒரு பேச்சாளன் அல்ல. நான்... நான் செய்யக்கூடிய ஒரே காரியம் என்னவென்றால்... தேவன் தமது பிள்ளைகளை ஆதாயம் பண்ணும் படிக்கு வேறு ஏதோவொன்றை என்னிடம் கொடுத்திருக்கிறார், அது என்னவென்றால் அவர்களுக்காக ஜெபிப்பதே. 26. நான் என்னுடைய சகோதரர்களைக் கனம் பண்ணுகிறேன். நான் சகோதரன் ராபர்ட்ஸ் அவர்களையும், பில்லி-கிரஹாம் அவர்களையும், வெளியே போய் கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணும் அதைப்போன்ற மனிதர்களையும் நான் எவ்வளவாக கனம் பண்ணி, அவர்களைக் குறித்து எவ்வளவாய் எண்ணிப் பார்க்கிறேன். நான்-நான் அவர்களைப் பாராட்டுகிறேன்; அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள், நான் அவர்களை நேசிக்கிறேன். அந்த மகத்தான ஊழியங்களைக் கொண்டிருக்கிற சகோதரன்.ஜாகர்ஸ், சகோதரன்.கோ, மற்றும் அந்த சகோதரர்கள் எல்லாரையும் என்னுடைய இருதயத்தில்... நான் அவர்களுக்காக இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். அன்றொரு நாளில் நம்முடைய சகோதரன் பில்லி கிரஹாமுக்கு சிறுநீரக அடைப்பு ஏற்பட்டு, ஜெர்மனியிலுள்ள மருத்துவமனை அல்லது ஏதோவொன்றில் படுத்துக் கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்ட போது...?... (அவர்) தைரியமாக... ‘அவர்கள் என்னை அங்கே ஒரு தூக்குப்படுக்கையில் படுக்க வைத்திருந்தாலும், நான் பிரசங்கம் பண்ணுவேன்’ என்றார். நான் என்னுடைய காரை நிறுத்தினேன். நான் சாலையினூடாக காரோட்டிப் போய்க் கொண்டிருந்த போது, என்னுடைய காரை நிறுத்தி விட்டு, நான், ‘அன்புள்ள தேவனே, அந்த மனிதரை விட்டு அதை நீக்கிப் போடும். அப்போது தான் அவரால் அங்கு போக முடியும். அவர் உமது ஊழியக்காரர், அவர் அங்கே... முயற்சித்துக் கொண்டிருக்கிறார். நாம் எல்லாருமே புரட்டஸ்டன்ட் விசுவாசிகளுடைய ஒரு பெரிய மண்டலமாக (realm) இருக்கிறோம். நாம் ஒருமித்து நின்று கொண்டிருக்கிறோம், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையில் நாம் ஒருமித்து நின்றாக வேண்டும். 27. நாம் வித்தியாசமானவர்களாக இருக்கலாம். பில்லி ஒருக்கால், ‘நான்... மாட்டேன். சகோதரன் பிரன்ஹாமே, உம்முடைய தெய்வீக சுகமளித்தலை நான் நம்ப மாட்டேன்’ என்று கூறலாம். அவர் ஒருக்கால் அவ்வாறிருக்கலாம். அது அவரைக் குறித்து கொஞ்சமும் குறைவாக என்னை நினைக்கச் செய்யாது. அவர் அப்படியே அதேவிதமாக என்னுடைய சகோதரனாகவே இருக்கிறார். அது உண்மை. மற்ற சகோதரர்களில் சிலர் ஒருக்கால், ‘சகோதரன் பிரன்ஹாமே, நான் உங்களோடு இணங்க மாட்டேன்’ என்று கூறலாம். அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை. நாம் எல்லாரும் அவருடைய அன்பான முகத்தைக் காணவே முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நாம் மனிதர்கள் தான்; நாம் வித்தியாசமானவர்களாக இருக்கலாம். நான் இன்று பிற்பகலில் ஒரு மோட்டார் வாகனத்தை வாங்கப் போவதாக இருந்தால், பில்லி-கிரஹாம் வாங்கப்போகிற காரிலிருந்து வித்தியாசமான ஒரு காரை வாங்கலாம். அவர் தம்முடைய காரைக் குறித்து விவாதிக்கலாம், நானும் என்னுடைய காரைக் குறித்து விவாதிக்கலாம், ஆனால் நாங்கள் இருவரும் கார்களில் தான் இருக்கிறோம்; தேவையானது எல்லாம் அவ்வளவு தான். நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கும் காலம் வரை அவ்வாறு தான் என்று நான் நினைக்கிறேன். ஆமென். அவ்வளவு தான்...?... 28. இப்பொழுது... அப்படியே... நான் நேற்று பிற்பகலில் உங்களை நீண்ட நேரம் பிடித்து வைத்து, சென்ற இரவி(லும்) பிரசங்கம் பண்ணினேன், நீங்கள் அதினால் ஒருவிதத்தில் களைப்படைந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனவே, என்னுடைய அதிகமான வற்றை... எனவே நாம் இன்றிரவு எவ்வளவு கூடுமோ அவ்வளவாக நேரத்தைக் குறைத்துக்கொள்ள முயற்சிப்போம். நான் ஒருவிதமாக இங்கேயுள்ள வேத வாக்கியங் களை வாசிக்கிறேன். காலை முழுவதும் நாங்கள் மிக மிக பிஸியாக இருந்து வருகிறோம். இங்கேயிருக்கும் மேலாளராகிய சகோதரன்.மூர் அவர்களுக்கு அது தெரியும், ஒலிநாடாக்களைப் பதிவு செய்வதிலும், மற்றும் ஒவ்வொரு காரியத்திலும், கூட்டத்திலும், சிறிய ஆலோசனைக் கூட்டங்களிலும், மற்றவைகளிலும் நாங்கள் மிகவும் பிஸியாக இருந்து வருகிறோம். இப்பொழுது, வெறுமனே எனக்கு கொஞ்ச நேரம் தான் கிடைத்தது, வேதாகமத்தை எடுத்து, தேடி ஆராய்ந்து பார்த்து விட்டு, ‘கர்த்தாவே, இன்று பிற்பகலில் நான் அந்த ஜனங்களிடம் எங்கேயிருந்து பேச?’ என்று கூறுவதற்கு ஒருக்கால் பத்து நிமிடங்கள் தான் கிடைத்தது. இப்பொழுது, நான் இங்கே எழுந்து நின்ற பிறகு, என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை. அவ்விதம் இருக்க, நான் சற்று முன்பு இங்கே திறந்த போது, இங்கே வேதாகமத்திலுள்ள ஒரு-ஒரு-ஒரு பாடத்தின் பேரில் (பேசலாம்) என்று தீர்மானித்துக் கொண்டேன். அது இயேசு தண்ணீரை அமரப்பண்ணின போது... 29. அனேக வருடங்களுக்கு முன்பு எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு சிறு பழைய ஸ்கோஃபீல்டு வேதாகமம் என்னிடம் இருக்கிறது, இங்கே, கேதரா தேசத்து வெறிபிடித்த மனிதன் இருக்கிறான். இப்பொழுது, நான் பேச வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிற அவைகளில் ஏதாகிலும் ஒன்றிலிருந்து நான் பேசலாம். எனவே நாம் கேதரா தேசத்து வெறிபிடித்த மனிதனைக் குறித்து ஏதோவொன்றை சற்று நேரம் வாசித்து, நாம் அறிய வேண்டுமென்று கர்த்தர் இங்கே என்ன வைத்திருக்கிறார் என்று பார்க்கலாம். மாற்கு 11, மாற்கு 5-வது அதிகாரம். (மாற்கு 5:1-12) பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கேதரா நாட்டில் வந்தார்கள். அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளி னாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டு இருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப் போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக் கொண்டு இருந்தான். அவன் இயேசுவைத் தூரத்திலே கண்ட போது, ஓடிவந்து, அவரைப் பணிந்து கொண்டான். (அது வினோதமாக உள்ளது, இல்லையா?) அவன் ஓடிவந்து அவரைப் பணிந்து கொண்டு: ...உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்குத் தேவன் பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று சொல்லியிருந்தார். அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி, தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்தி விடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தது. அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன -அவரை வேண்டிக்கொண்டன. இப்பொழுது, கர்த்தர் தாமே இந்த வார்த்தையின் வாசிப்பில் தம்முடைய ஆசீர்வாதங் களைக் கூட்டுவோராக. நாம் ஜெபிக்கையில் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமா? 30. இப்பொழுது, எங்கள் இரக்கமுள்ள பரலோகப் பிதாவே, இரக்கத்திற்காக இந்தப் பிற்பகலில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது குமாரனாகிய இயேசு எங்களைப் பாவத்திலிருந்து விடுவித்திருக்கிறார் என்பதற்காகவும், இப்பொழுது நாங்கள் உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் என்பதற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய ஆசீர்வாதங்கள் எங்கள் மேல் இருக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னித்தருளும். பிதாவே, அநேகமாக இன்று நிறைய பேர் உள்ளே வந்து இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் சிலர் மரித்துக் கொண்டிருக்கிற நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்மிடம் வர இயலாவிட்டால், அவர்கள் இங்கே பூமியிலேயே அழிந்து விடுவார்கள் (மரித்து விடுவார்கள்). பிதாவே, அவர்கள் எங்களுக்குத் தேவை. அவர்கள் விசுவாசிகளாயிருக்கிறார்கள். இந்த வார்த்தையின் வாசிப்பில் ஏதோவொன்று சொல்லப்பட வேண்டும் என்றும், அல்லது உமது ஊழியக்காரன் மூலமாக ஏதோவொன்று சொல்லப்பட வேண்டும் என்றும் நான் ஜெபிக்கிறேன், இந்த வியாதியிலிருந்து அவர்களை விடுதலையாக்கியிருக்கிற எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றவர்களுக்காகபட்ட பாடுகளிலும், அவருடைய மரணத்திலும் அவர்கள் விசுவாசம் கொண்டிருக்க அது தாமே காரணமாயிருப்பதாக. இது தாமே ஆராதனையின் மகத்தான ஒரு சாயங்கால வேளையாக - அல்லது பகல் வேளையாக இருப்பதாக. 31. இன்றிரவு மிகுதியாகவும், அபரிமிதமாகவும் ஒரு ஊற்றப்படுதலை எங்களுக்குத் தாரும். குருடர்களை மீண்டும் காணச் செய்யவும், செவிடர்களைக் கேட்கச் செய்யவும், ஊமையர்களைப் பேச வைக்கவும், முடவர்களை நடக்கச் செய்யவும் தேவனுடைய வல்லமை தாமே இங்கிருப்பதாக. கர்த்தாவே, நீர் தாமே ஒரு மகத்தான வழியில் எங்களுக்கு உம்மைத் தாமே வெளிப்படுத்த வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே, எங்களை நேசித்து, எங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளும். நாங்கள் இதை உம்முடைய அன்பு பிள்ளையாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். இப்பொழுது, நான் அப்படியே கர்த்தராகிய இயேசுவைக் குறித்து சிந்திக்க விரும்புகிறேன். நான் எப்போதுமே இயேசுவைக் குறித்து என்னால் கூடிய மட்டும் முழுவதும் உணர்ச்சி பெருக்கோடு பேச விரும்புகிறேன். சமீபத்தில் யாரோ ஒருவர் கூறினார்; அது இங்குள்ள வேறொரு பட்டணமாகிய இல்லினாய்ஸில் நடந்தது, அவர், ‘சகோதரன் பிரன்ஹாமே, நீர் இயேசுவைக் குறித்து அதிகமாகப் பேசுகிறீர். நீர் அவரைக் குறித்து அதிகமாகப் புகழ்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறீர்’ என்றார். நான், ‘நல்லது, என்னாலோ அல்லது வேறு யாராலும் பேச முடிந்த புகழ்ச்சியான பேச்சுகள் எல்லாவற்றிற்கும் அவர் பாத்திரராயிருக்கிறார்’ என்றேன். உடனே, ‘நல்லது, நீர் வெறுமனே- நீர் (அவ்வாறு) செய்ய வேண்டாம். வேதாகமத்தில் உள்ள மற்ற பாத்திரங்களில் (characters) சிலரைக் குறித்து நீர் ஏன் பேசுவதில்லை?’ என்று கூறினார். நான், ‘நான் யாரைக் குறித்தாவது எதையாகிலும் அறிந்து வைத்திருப்பேன் என்றால், அது அவரைக் குறித்து மாத்திரமே’ என்றேன். 32. அவரைக் குறித்துப் பேசுவது எனக்குப் பிடிக்கும், நான் அவரை விசுவாசிக்கிறேன். இந்நாளில் அவர் ஒரு-ஒரு நல்ல மனிதர் என்று அநேக ஜனங்கள் மத்தியில் எண்ணப்படும் வேளையில்... அவர்களில் சிலர், ‘நல்லது இப்பொழுது, அவர் வெறும் ஒரு மனிதர் தான்’ என்று கூறுகிறார்கள். நல்லது, அவர் ஒரு மனிதராயிருந்தார் என்று நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர் ஒரு மனிதரைக் காட்டிலும் மேலானவராக இருந்தார். அவர்களில் சிலர், ‘நல்லது, அவர் ஒரு- அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தார்’ என்கின்றனர். ஆமாம், அது உண்மை தான், ஆனால் அவர் ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவராயிருந்தார். அவர் தேவனாய் இருந்தார். இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாய் இருந்தார். அவருடைய பிதாவாகிய யேகோவா தேவன், கன்னி மரியாளின் மேல் நிழலிட்டு, குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை உண்டாக்கின ஒரு இரத்த அணுவாக அவளுக்குள் உற்பவித்தார். ஞானஸ்நானத்தின் போது... அவர் யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்படுவது வரையில், அவர் ஒரு மனிதராகவே ஜீவித்தார். அவருடைய ஞான ஸ்நானத்திற்குப்பிறகு உடனே, பரிசுத்த ஆவியானவர் வானத்திலிருந்து வந்து, அவர் இடத்தில் இறங்கி, அவர் மேல் தங்கினதைத் தான் கண்டதாக யோவான் சாட்சி கொடுத்தான். அந்த நேரத்திற்கு முன்பே, ‘ஆவியானவர் இறங்கி வந்து யார் மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவர் தான் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்’ என்று யோவானிடம் கூறின ஒரு சத்தத்தை அவன் வனாந்தரத்தில் இருக்கும் போது கேட்டான். இயேசு இங்கே பூமியில் இருந்த போது, அவர் இவ்வாறு கூறினார், ‘நானாகவே எதையும் செய்வதில்லை; அது நானல்ல; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே அதைச் செய்கிறவர்’ என்று. பாருங்கள்? இப்பொழுது, வேதாகமம், ‘பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தைத் தமக்கு ஒப்புரவாக்கிக் கொண்டார்’ என்று கூறுகிறது. பாருங்கள்? எனவே அவர் ஒரு மனிதரைக் காட்டிலும் மேலானவராய் இருந்தார். அவர் ஒரு தேவன், மனிதராய் இருந்தார். அவர் ஒரு தேவ மனிதரல்ல, தேவன் மனிதராயிருந்தார். 33. அவர் பாவத்தைப் போக்கும்படியாக மாம்சமான தேவனாயிருந்தார். அவர் அந்த ஒரே வழியில் தான் இருக்க முடிந்தது. தேவன் பாடுபட வேண்டியதாயிருந்தது. தேவன் மாம்சமாகாமல், தம்முடைய சொந்த நியாயத் தீர்ப்பின் தண்டனைக்காக பாடுபட முடியாது இருந்தது. ஏனென்றால் தேவன் அழிவில்லாதவர். அவர் ஒரு ஆவியாய் இருக்கிறார். இயேசு பரிசுத்த யோவான் 4-ம் அதிகாரத்தில், ‘தேவன் ஆவியாய் இருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும்’ என்றார். ஆவிக்குக் கூறப்பட்டிருந்தபடி, ஒரு ஆவியினால் மரணத்திற்கேதுவாக பாடுபட முடியவில்லை. ஆவியானது அதனுடைய இடத்தை எடுக்கும்படி ஒரு தீர்க்கதரிசியை அனுப்பவில்லை. ஆவியானது அதனுடைய இடத்தை எடுக்கும்படி ஒரு நல்ல மனிதனை அனுப்பவில்லை. அந்த ஆவி தாமே அதனுடைய இடத்தை எடுக்கும்படி மாம்சத்தில் வந்தது. அது உண்மை. தேவன் ஒரு பாவியின் இடத்தை எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக மரித்தார். 34. நான் இங்கேயிருக்கும் ஒவ்வொருவருக்கும் தண்டனை தீர்ப்பு வழங்கி, அவர்கள் அந்த ஒளியை நோக்கிப் பார்த்து, யாரோ ஒருவர் நோக்கிப் பார்க்கும் போது, அவர் மரித்துப் போக நான் விரும்பாமல், அவர்களை விடுவிக்க நான் விரும்பினால், அந்த இடத்தை எடுக்கும்படி என்னுடைய நல் நண்பராகிய சகோதரன் மூர் அவர்களை கேட்டுக் கொள்ள முடியாது. அவர்களுடைய இடத்தை எடுத்துக் கொள்ள என்னால்.. சகோதரன் ஜோசப் அவர்களைக் கேட்டுக் கொள்ள முடியாது. அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் என்னுடைய மகன் பில்லிபாலிடம் அந்த இடத்தை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்வேன் என்றால் நான் அநீதியுள்ளவனாக இருப்பேன். அதை நீதியாகச் செய்யக் கூடிய ஒரே ஒரு வழி தான் உண்டு: நானே அந்த இடத்தை எடுத்துக் கொள்வது தான் அது. அதை நீதியாகச் செய்யக் கூடிய ஒரே வழி அதுவே. தேவன் நீதிபரராயிருக்கிறார். எனவே தான் தேவன் இறங்கி வந்து ஒரு சரீரத்தை உண்டாக்கிக்கொண்டு, தமக்காகவே ஒரு கூடாரத்தைக் கட்டிக் கொண்டார்... அவர்கள் அவருக்குச் செய்தார்கள். ‘ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட கூடாரங்களில் வாசமாயிரார், ஆனால் நீர் எனக்காக ஒரு சரீரத்தை ஆயத்தப் படுத்தினீர்.’ அது உண்மை. 35. தேவன் தாம் வாசமாயிருக்கும்படி தமக்கு சொந்தமாக சரீரத்தை உண்டாக்கிக் கொண்டார். அந்த சரீரம் தான் அவருடைய சொந்த குமாரனாகிய கிறிஸ்து இயேசுவாக இருந்தது. ‘தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். பிதாவை ஒருவனும் ஒரு போதும் கண்டதில்லை, ஆனால் ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படையாக அறிவித்தார்.’ அது சரி தானே? அது அற்புதமானது. இன்று... இப்பொழுது, கிறிஸ்தவ விஞ்ஞானத்தைச் சேர்ந்த அன்பு ஜனங்களாகிய உங்களில் சிலர் அதனோடு இணங்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவர் - இயேசு கிறிஸ்துவினுடைய இரத்த பலியின் மூலமாக மாத்திரமே மனிதன் இரட்சிக்கப்பட்டு சுகமடைகிறான், நண்பர்களே, செய்யப்படக் கூடியதான ஒரே வழி அது தான். மேலும் இயேசு, தாம் இங்கே பூமியில் இருந்த போது, இயேசு திரும்பி வரும் வேளையில், தேவன் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவுக்குள் திரும்பி வரும் போது, தேவன் என்னவாயிருப்பார் என்பதன் ஒரு திருஷ்டாந்தமாக அவர் இருந்தார். 36. இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இங்கே பூமியில் இருக்கிறார், ஆனால் இயேசு கிறிஸ்துவோ எல்லா தூதர்கள், பிரதான தூதர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னதத்தில் மகத்துவமானவரின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து, பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழு குடும்பத்துக்கும் அவருக்குப் பிறகே பெயரிடப்பட்டன, அப்படிப்பட்ட ஒரு நாமத்தை அவர் பெற்றிருக்கிறார். அது உண்மை. அது தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. எனவே நான் நிச்சயமாக அவரை விசுவாசிக்கிறேன். ஒரு பெண்மணி, கிறிஸ்தவ விஞ்ஞானத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்னிடம் கூறினாள், அதே பெண்மணி தான் என்னிடம் பேசிக் கொண்டிருந்தாள்; அவள், ‘சகோதரன் பிரன்ஹாமே, இயேசு மிகமகத்தானவர் என்றும் அவ்விதமான எல்லாவற் றையும் குறித்தே நீர் பேசிக் கொண்டிருக்கிறீர். நாங்கள்... அவர் வெறுமனே ஒரு மனிதரைக் காட்டிலும் மேலானவராக இருக்கவில்லை’ என்றாள். நான், ‘ஆமாம், அவர் மனிதராக இருந்தார்’ என்றேன். அவள், ‘அவர் வெறும் ஒரு மனிதர் தான் என்று நான் வேதாகமத்தைக் கொண்டு உமக்கு நிரூபித்துக் காட்டுகிறேன்’ என்றாள். நான், ‘ஓ, நிச்சயமாக’ என்றேன். அவள், ‘அவர் ஒரு மனிதர் மாத்திரமே என்று என்னால் உமக்கு நிரூபித்துக் காட்ட முடியுமானால், நீர் அதை ஏற்றுக் கொள்வீரா?’ என்றாள். நான், ‘சரி, மேடம்’ என்றேன். 37. நல்லது, அவள், ‘பரிசுத்த யோவான் 11-வது அதிகாரத்தில், இயேசு லாசருவின் கல்லறைக்குச் சென்ற போது, ‘அவர் கண்ணீர் விட்டார்’ என்று வேதாகமம் கூறுகிறதே. அழிவில்லாத ஒருவரால் கண்ணீர் விட்டு அழ முடியாதே. அவர் தேவனல்ல, ஏனென்றால் தேவனால் அழ முடியாது’ என்றாள். நான், ‘பெண்மணியே, உன்னுடைய விவாதமானது சாகும் தருவாயிலுள்ள மிகவும் மெலிந்து போன ஒரு கோழிக்குஞ்சைக் கொண்டு உண்டாக்கின குழம்பைக் காட்டிலும் அதிக தண்ணீராகவும், நீர் அதிகம் கலந்திருக்கிறதாகவும் இருக்கிறது... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) நீ முற்றிலுமாக எதையும் பெற்றிருக்கவேயில்லை. அது- அதற்கு (இதனோடு) எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் ஒரு மனிதராயிருந்தார், ஆனால் அவர் தேவன். மனிதராயிருந்தார். அவர் லாசருவின் கல்லறைக்குச் சென்ற போது, அவர் அழுது கொண்டிருந்தது உண்மை தான். லாசருவின் கல்லறைக்குப் போகும் போது, அவர் ஒரு மனிதனைப் போன்று அழுதார், ஆனால் அவர் அங்கே நின்று கொண்டு, ‘லாசருவே, வெளியே வா’ என்று சொன்ன போது, அவர் ஒரு மனிதரைக் காட்டிலும் மேலானவராயிருந்தார்’ என்றேன். ஆம், ஐயா. 38. ஒரு மனிதன் மரித்து நான்கு நாட்களாகியிருந்தது, தோல் புழுக்கள் அவனுடைய சரீரம் முழுவதையும் மொய்த்துக் கொண்டிருக்க (crawling), அவன் அங்கே அந்தக் கல்லறையில் படுத்து அழுகிப் போய்க் கொண்டிருந்தான்... ஒரு... ஏன், அழிவு தன்னுடைய எஜமானை அறிந்திருந்தது; அந்த ஆத்துமா தன்னுடைய சிருஷ்டிகரை அறிந்திருந்தது. மரித்து நான்கு நாட்களான ஒரு மனிதன் அவருடைய சத்தத்தினால் எழுந்து நின்றான். அது ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானது. ஆம், ஐயா. நாம் ஒரு சில நிமிடங்களில் பேசப்போகிற இந்தச் சிறிய படகில் அவர் வெளியே இருந்த போது, அவர் ஒரு மனிதராக இருந்தார், ஏறக்குறைய அந்த இரவில், அந்தப் படகு ஒரு சிறிய பழைய குப்பியின் மூடியை (அடைப்பானைப்) போன்று வெளியே அங்கே புயலில் இருந்தது. சமுத்திரத்திலுள்ள பத்தாயிரம் பிசாசுகள் அவரை அந்த இரவில் மூழ்கடித்துக் கொன்று விட வேண்டும் என்று சபதம் செய்திருந்தன. ஏன், அவர் வெறுமனே ஒரு மனிதராக இருந்து, களைப்போடு கூட, அங்கே அந்தப் படகில் படுத்துக் கொண்டிருந்தார், அலைகள் அவரை அங்குமிங்கும் அலைகளித்துக் கொண்டிருந்தது. 39. அலைகளாலும் கூட அவரைத் தூக்கத்தை விட்டு எழுப்ப முடியாத அளவுக்கு அவர் அங்கே படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதராக இருந்தார். அவர் களைப் படைந்து, சரீர பிரகாரமாக மிகவும் களைத்துப் போயிருந்தார். அது ஒரு மனிதனாக இருந்தது. ஆனால் அவர் தூக்கத்தை விட்டு எழுந்து, நடந்து சென்று, கப்பற்பாயின் நுனிக்கயிற்றில் தம்முடைய கால்களை வைத்து, ஏறெடுத்துப் பார்த்து, ‘இரையாதே, அமைதலாயிரு’ என்றார்.. உடனே அந்த பலமுள்ள புயல்கள் தங்களுடைய செட்டைகளை மடக்கிக் கொண்டு, சமுத்திரத்தின் அடியில் சென்று, அமைதியாகி, அங்கே நித்திரையில் அடங்கிப் போய் விட்டது. அது ஒரு மனிதரைக் காட்டிலும் மேலானதாக இருந்தது. ஆம், ஐயா. அது ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானதாக இருந்தது. அவர் அன்று காலையில், மலையிலிருந்து வந்து, சுற்றும் முற்றும் பார்த்து, அந்த மரத்திலே புசிக்க ஏதாகிலும் கிடைக்குமா என்று அவ்விதமாக பார்த்த போது, அவர் ஒரு மனிதராயிருந்தார். அது ஒரு மனிதனாக இருந்தது. நமக்கிருப்பது போன்ற ஒரு வயிறே அவருக்கும் இருந்தது. நமக்கிருப்பது போன்றே அவருக்கும் பசியிருந்தது. அவர் பசியாயிருந்து, புசிக்க ஏதாவது கிடைக்குமா என்று ஏதோவொன்றிற்காக ஒரு மரத்தை நோக்கிப்பார்த்த போது, அது ஒரு மனிதனாக இருந்தது. அது ஒரு மனிதனாய் இருந்தது. ஆனால் அவர் ஐந்து அப்பங்களை எடுத்து ஐயாயிரம் பேருக்கு போஷித்த போது, அது ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானதாக இருந்தது. அது சரியல்லவா? அது தேவனே தமது குமாரனுக்குள் இருந்ததாகும். 40. அவர் கல்வாரியில் ஒரு பலியாக, இரத்தஞ்சிந்தி, ஒரு மனிதனைப் போன்று அவரிடமிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருக்க, அவருடைய தாடி முழுவதும் உமிழ் நீர் தொங்கிக் கொண்டே மரித்த போது, அவர் ஒரு மனிதராயிருந்தார். அவர் அவமானம் அடைந்து, அங்கே வெட்கத்தோடு நின்று தொங்கிக் கொண்டு, நம்முடைய இடத்தை எடுத்துக் கொண்ட போது, அவர் ஒரு மனிதனாயிருந்தார். அவர், ‘என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?’ என்று கதறும் அளவுக்கு அதிக வேதனைப்பட்டவராக இருந்த போது, அவர் ஒரு மனிதராயிருந்தார். அங்கே அது ஒரு மனிதனாயிருந்தது, ஆனால் அவர் ஈஸ்டர் காலையில் உயிர்த்- தெழுந்த போது, அவர் ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானவராயிருந்தார் என்பதை நிரூபித்தார். ஆம், ஐயா. ஈஸ்டர் காலையில், அவரை உயிரோடெழுப்பின தேவனாக அது இருந்தது. ஆம், ஐயா. அவர் தேவன், மனிதராய் இருந்தார். அவர் நிச்சயமாகவே அவ்வாறு இருந்தார். அவர் தாமே ஒரு கல்லாத மனிதனின் ரூபமெடுத்து நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்தார். அவர் ஒரு போதும் ஒரு இராஜாவாகவோ, அல்லது ஆளுகை செய்கிற ஒருவராகவோ வரவில்லை. அவர் பிறந்து, ஒரு தொழுவத்தின் வாசல் வழியாக வந்து, மரண தண்டனையினூடாக வெளியே கடந்து சென்றார். அவர் தாழ்மையுள்ளவராகவும், சாந்தமுள்ளவராகவும், எளிமையானவராகவும் இருந்தார். முறைகேடாகப் பிறந்த ஒரு பிள்ளை என்று தம்முடைய பெயரோடு ஒரு அவப்பெயரையும் சேர்த்துக் கொண்ட வராய் உலகத்தில் வந்தார். அது உண்மை. எல்லாவிதத்திலும் சோர்வுற்றவராய் இருந்தார். அவர் ஒரு மதவெறியராய் இருந்தார். அவர் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூல் என்றும் மற்றும் எல்லாமாகவும் அழைக்கப்பட்டார். அப்பொழுதும் தாழ்மையுள்ளவராகவும், சாந்த குணமுள்ளவராகவும், தம்முடைய வாயைத் திறவாதவராகவும் இருந்தார். 41. அவர் பிதாவினுடைய சித்தத்தைச் செய்யும்படிக்கே தமது முகத்தை (அதின் மேல்) பதித்துக் கொண்டார், அதையே அவர் செய்தார். அது உண்மை. அவர் அந்த வேலையைச் செய்து முடித்தார். அப்படியானால் நீங்களும் நானும் பரிசுத்த உருளையர்கள் என்றோ, மதவெறியர்கள் என்றோ, பித்து பிடித்தவர்கள் என்றோ, மற்ற எல்லாமாகவும் அழைக்கப்படப் போகிறோம். அதைக் குறித்து நினைக்கக் கூடியதான எல்லாவற்றாலும் அழைக்கப்படப்போகிறோம். ஆனால் நமக்கு ஒரு நோக்கம் உண்டு, நாம் பிதாவின் சித்தத்தைச் செய்யும்படிக்கே நம்முடைய முகத்தை (அதின்மேல்) பதித்துக் கொண்டு, அதனோடு தரித்திருக்கிறோம். அது உண்மை. உலகம் தாங்கள் விரும்பும் எதையும் கூறட்டும், அது அவர்களைப் பொறுத்தது. ஆனால் நாம் செய்ய வேண்டிய ஒரு காரியம் உண்டு; அது தேவனுக்குக் கீழ்ப்படிதலே. சில ஜனங்கள், ‘ஏன், சகோதரன் பிரன்ஹாமே, அது பிசாசினுடையது’ என்று கூறுகிறார்கள். அவர்கள் எவ்வளவு...?... என்பது எனக்குக் கவலையில்லை, இயேசுவை பிசாசினுடையவர் என்று கூறினார்களே. அவரை பெயல்செபூல் என்று அவர்கள் கூறினார்கள். அது என்னைச் சங்கடப்படுத்துவதில்லை. அவர்கள் விரும்புகிற எதுவாகவும் அவர்கள் அழைக்கலாம். அவர்கள், ‘நல்லது, நீங்கள் இங்கேயும் வராமல், அங்கேயும் வராமல், ஏன் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்கலாம். நான் எங்கு போக வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதைக் கண்டுபிடிக்கவே காத்துக் கொண்டிருக்கிறேன், அதன் பிறகு நான் அங்கு சென்று அதைச் செய்கிறேன். அது உண்மை. செய்ய வேண்டிய சிறந்த வழி அதுவே. 42. இப்பொழுது அவர் இங்கேயிருப்பதைக் கண்டு கொள்கிறோம், அவர் வெளியே எங்காவது முட்டாள்தனமான காரியங்கள் மற்றும் எல்லாவற்றிலும் ஒரு போதும் வீணாக அலைந்து திரிந்து கொண்டிருக்கவில்லை. அவர் எப்போதுமே பிதாவினுடைய சித்தத்தில் இருந்து, பிதாவுக்கடுத்தவைகளைச் செய்து கொண்டிருந்தார். அந்த இரவில் அவர் இங்கே சமுத்திரத்தைக் கடந்து வந்து கொண்டிருப்பதைக் காண்கிறேன். ஓ, என்னே. அலைகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. அவர் பகல் முழுவதும் உட்கார்ந்து போதித்து, வியாதியஸ்தரைச் சுகமாக்கின பிறகு, அந்த மனிதர் ஏன் அதைத் தெரிந்து கொண்டார்? இப்பொழுது, அவர் வெளியே ஒரு சிறிய படகில் இருந்தவாறு, கடலைக் கடந்து வந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். ஏனென்றால் வேறொரு தேசமாகிய கேதராவில் (Gadara), ஒரு ஆத்துமா அவரைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. சிந்தித்துப் பாருங்கள்! ஒரு பலத்தப் புயலில் கடலைக் கடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு ஆத்துமாவை இரட்சிக்க - ஒரு மனிதனைச் சுகமாக்க, அவர் அந்த இரவில், ஆபத்தான தீங்கு நேரிடுவதற்கு ஏதுவாயிருந்த அந்த எல்லாகாரியத்தினூடாகவும் சென்று கொண்டு இருந்தார். அவர் அந்தப் புயலினூடாக தொல்லையோடுகூட கடலின் ஒரு பக்கத்தில் இருந்து இரவு முழுவதும் பிரயாணம் செய்து அடுத்த நாள் வரைக்குமாக பயணப்பட்டு வந்து கொண்டிருந்தார், ஒரு மனிதனைச் சுகமாக்க, அவர் அந்த இரவில் பெரிய அலைகளோடு கூட புயல் வீசிக்கொண்டிருந்த அந்தக் கடலில் அவர் வந்து கொண்டு இருந்தார். 43. என்னுடைய சகோதரனே, நான் இதைக் கூறுகிறேன், இந்தப் பிற்பகல் வேளையிலும், உங்களில் யாராவது ஒருவரை விடுவிக்கும்படி அவர் மகிமையை விட்டு வருவார். அது உண்மை. இந்தப் பிற்பகலில் உங்களைச் சுகப்படுத்தவும், உங்களைச் சரியாக்கும்படியாகவும், அவர் ஒவ்வொரு சபையினூடாகவும், குற்றம் கண்டு பிடிக்கிற ஒவ்வொன்றினூடாகவும், மற்ற ஒவ்வொன்றினூடாகவும், ஒவ்வொரு மதவெறித்தனம், மற்றும் மற்ற எல்லாவற்றினூடாகவும் உங்களிடம் இறங்கி வருவார். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? ஆம், ஐயா. அவர் உள்ளே பிரவேசிக்கக் கூடிய உத்தமமான ஒரு இருதயத்தைக் கண்டு கொள்ளட்டும்... அப்போது அவர் எந்த நேரத்திலும், இரவின் எந்த வேளையிலும் வருவார். எந்த நேரமும் வருகிற ஒரு மருத்துவர் நமக்கு இருப்பதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஓ, அவர் என்னுடைய அடைக்கலமாகவும், பலமாகவும், ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையாகவும் இருப்பதை அறியும் போது, நான் அதற்காக மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு நடந்த சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது, நான் இயற்கையை நேசிக்கிற விதமான ஒரு மனிதன் என்று உங்கள் எல்லாருக்கும் தெரியும். நான் வெளியே குன்றுகளைச் சென்று பார்க்கவும், வேட்டையாடச் செல்லவும், மற்ற காரியங்களைச் செய்யவும் எனக்குப் பிரியம். பெரிய அளவில், விலங்குகளை வேட்டையாடுவதற்காக அல்ல, ஆனால் வெளியே மலைப்புறங்களில் அப்படியே இருப்பது எனக்குப் பிடிக்கும். இது எனக்கு நினைவுக்கு வருகிறது... நான் காடுகளை நன்றாக அறிந்தவன் (woodsman) என்று எண்ணியிருந்தேன். யாருமே... என்னுடைய பாட்டனார் பாதி இந்தியர், அவர் காடுகளில் தான் வசித்து வந்தார், நான், ‘நல்லது, நான் என்னுடைய தாத்தாவைப் போன்றேயிருக்கிறேன், அவர்... ஏன், என்னை எங்குமே வழிதவறிப் போகும்படிச் செய்ய உங்களால் முடியாது. நான் எல்லா நேரமும் எங்கேயிருக்கிறேன் என்பதை அறிந்து கொள்வதற்கு போதுமான உள்ளுணர்வு எனக்கு உண்டு’ என்று நினைத்திருந்தேன். 44. உங்களுக்கு அது தெரியாது என்பதை நீங்களே அறிந்து கொள்ளும்படி செய்ய தேவன் சில சமயங்களில் உங்களை... உங்கள் கால்களை விட்டு விலக்க வேண்டிய வராயிருக்கிறார். நாம் அவரையே சார்ந்திருக்க வேண்டும். ஒருநாள் அடிரான்டாக்கின் உச்சியில்... நான் அப்போது தான் அதைத் தொடங்கியிருந்தேன்... அங்கே பின்னால் இருக்கும் என்னுடைய சிறிய மகன் பில்லி அப்போது ஒரு சின்னஞ்சிறிய பையனாய் இருந்தான். நாங்கள் பழைய சாய்வான கூரையிருக்கும் ஒரு சிறு இடத்தில் (lean-to) இருந்தோம். காட்டிலாகா அதிகாரி இன்னும் மேலே வந்திருக்கவில்லை. நாங்கள் கரடி வேட்டைக்குப் போகப் போவதாயிருந்தோம். நான் மனைவியிடம், ‘இதோ அங்கு மிக உயரமான அந்த இடத்தில், ஒரு கூட்டம் மான்கள் கீழே இறங்கிப் போகின்றன. நான் இன்று அங்கே கீழே இறங்கிச் செல்ல விரும்புகிறேன்’ என்றேன். நான் அங்கிருந்து வெளியே சென்றேன், அப்போது அங்கே ஒரு புயல் வந்தது. நியூ இங்கிலாந்து (New England) மாகாணத்திலிருக்கும் உங்களுக்கு அது தெரியும், புயல்கள் வரும் போது, மூடுபனி வந்து விடுகிறது, அப்போது உங்களால் எதையுமே காண முடியாது. நான்... நான் அப்படியே துப்பாக்கியால் ஒரு மானைச் சுட்டு விட்டு, திரும்பி மேலே சென்று கொண்டிருந்தேன். நான், ‘நல்லது, நான் மேலே திரும்பி சென்று, அவளிடம் போய்ச் சேர்ந்து விடுவேன்’ என்றேன். ஏனென்றால் நான் இரண்டு மணிக்கு வந்து விடுவேன் என்று அவளிடம் கூறியிருந்தேன். 45. நான் அதனூடாக மேலே சென்று, இவ்விதமாக ஒரு சிறு பக்க கிளை பகுதி வழியாக மேலே சென்று, நெடுகப் போய்க் கொண்டிருந்தேன். நான் தொடர்ந்து நடந்து, நடந்து கொண்டேயிருந்தேன். நான், ‘நல்லது, நான் சற்று நேரம் நிற்கும்படியான இடத்தை நோக்கி, அதற்கு அருகில், நான் மேலாகப் போயாக வேண்டும்’ என்று நினைத்தேன். அப்போது நான் ஏறெடுத்துப் பார்த்த போது, மறுபடியும் சரியாக என்னுடைய மான் இருக்கும் இடத்திற்கே திரும்பி வர நேரிட்டிருந்தது. நல்லது, நான், ‘நான் அதை எப்படித் தவற விட்டேன்?’ என்று நினைத்து, மறுபடியும் ஏறக்குறைய முப்பது நாற்பது நிமிடங்களாக நடந்து, நடந்து கொண்டேயிருந்தேன், அப்போது நான் சரியாக மறுபடியும் என்னுடைய மானிடமாகவே திரும்பி வந்திருந்தேன். இப்பொழுது, இந்தியர்கள் அதை மரண நடை என்று அழைப்பார்கள். நீங்கள் ஒரு வட்டத்திற்குள் நடந்து கொண்டிருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. மூடுபனியானது மிகவுமாக கீழே இறங்கியிருந்தது, அப்போது திசைகாட்டும் கருவிகளோ, அல்லது எதுவுமோ இல்லாதிருந்தது. அப்போது தான் நான் சிக்குண்டு போனதைக் கண்டேன். நான், ‘நல்லது, நான் ஏதோ திசையில் சென்றாக வேண்டும்’ என்றேன். நான், ‘நான் வரும் போது, காற்று என் முகத்தில் வீசியதே, எனவே நான் ஒருக்கால், என்னுடைய முகத்தில் காற்று வீசிய வண்ணம் இருக்க, இந்த வழியாகப் போவது தான் நல்லது’ என்று எண்ணினேன். 46. நான் அந்த வழியில் போகத் தொடங்கின போது, நான், ‘ஓ...’ என்று நினைத்தேன். நான் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தேன்... நான், ஏன், அந்த சுவர் மட்டுமாக உள்ள தூரம் கூட காண்பது எனக்குக் கடினமாக இருந்தது. அந்தப் பெரிய உயரமான மரங்கள் இங்குமங்குமாக அசைந்தாடிக் கொண்டிருந்தன. நான், ‘என்ன செய்வது?’ என்று நினைத்துக் கொண்டு, ‘உனக்குத் தெரியுமா, என்னுடைய மனைவி வாலிப பெண்ணாய் இருக்கிறாள், அவள் சாய்ந்த கூரையுள்ள அந்த இடத்தில் இருக்கிறாள், சீதோஷ்ண நிலையோ ஏறக்குறைய பூஜ்யம் டிகிரி ஆகி விட்டது. என்னுடைய சின்னஞ்சிறிய மகனும் அங்கிருக்கிறான், அவர்கள் இன்றிரவே பனியால் உறைந்து மரித்து விடுவார்கள். அவள், சாலை எதுவிலிருந்தும் அல்லது எந்த காரியத்திலிருந்தும் ஏறக்குறைய 25 மைல்கள் தூரத்திலுள்ள இந்த வனாந்தரத்திலே, பயத்தினாலேயே மரித்து விடுவாள், என்று நினைத்தேன். நான், ‘நான் இங்கே தன்னந்தனியாக இருப்பதைக் குறித்து பயந்தே அவள் மரித்து விடுவாள், ஏனென்றால் இன்று காலையில் நாங்கள் அங்கே ஒரு மலைச் சிங்கத்தை கண்டோம், அவள் அதைக் குறித்து பயந்தாளே; என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லையே’ என்றேன். நான் தொடர்ந்து போகத் தொடங்கி, நான் முழுவதும் குழம்பிப் போயிருப்பதைக் கண்டு கொண்டேன். எங்கே போவதென்றே எனக்குத் தெரியவில்லை. அப்போது ஏதொவொன்று, ‘நான் கர்த்தர், நான் ஆபத்துக் காலத்திலே அனுகூலமான துணையாயிருக்கிறேன்’ என்று என்னுடைய காதில் கூறிக் கொண்டு இருந்ததை தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தேன். 47. நான், ‘இதோ பார், வில்லியம் பிரன்ஹாம், ஏன், உனக்கு--உனக்கு அதிகம் தெரியும். நீ இப்பொழுது பயப்படுவதைக் காட்டிலும் உனக்குக் காடுகளைக் குறித்து அதிகம் தெரியும்’ என்றேன். ஏன், நான்... அவர்களில் அநேகர் ஒவ்வொரு வருடமும் அவ்விதமாக மரித்துப் போகிறார்கள், நீங்கள் வழிதவறிப் போகும் போது, நீங்கள் நடுநடுங்கினவர்களாய், பிறகு மரித்துப் போய் விடுவீர்கள். நான், ‘ஏன், உனக்குக் காடுகளைக் குறித்து அதைக் காட்டிலும் அதிகம் தெரியும்’ என்றேன். ஏதோவொன்று தொடர்ந்து என்னிடம், ‘அந்தப் பிள்ளை மரித்து விடும்; மனைவியும் மரித்து விடுவாள்; நீயும் இங்கே இந்தக் காட்டிலேயே மரித்துப் போய் விடுவாய்’ என்று கூறிக் கொண்டிருந்தது. இப்பொழுது, (அங்கே என்னுடைய மனைவி இல்லாமல் இருந்தால்), வழக்கமாக நான் எனக்கென்று ஒரு இடத்தைக் கண்டு பிடித்து, நெருப்பு மூட்டி, புயல் ஓயும் வரை ஓரிரண்டு நாட்கள் காத்துக் கொண்டிருந்து விட்டு, வெளியே போய் விடுவேன். சரி, ஆனால் மனைவியோ காட்டில் இருக்கிறாள், பிள்ளையும் அங்கேயிருக்கிறான், எனவே என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. எனவே நான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, ‘நானே கர்த்தர், நான் ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையாய் இருக்கிறேன்’ என்று கூறிக் கொண்டிருந்த ஒரு சத்தத்தை என்னால் கேட்க முடிந்தது. எனவே என்னுடைய பழைய துப்பாக்கியை ஒரு மரத்தில் சாய்த்து வைத்து விட்டு, என்னுடைய தொப்பியைக் கழற்றி, அதையும் கீழே வைத்தேன். பிறகு ஏறெடுத்துப் பார்த்து, ‘பரலோகப் பிதாவே, காட்டைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் தவறு செய்து விட்டேன். கர்த்தாவே, என்னால் முடியாது- உம்மையல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது. நான் இழக்கப்பட்டு, முற்றிலுமாக வழிதவறிப் போய் விட்டேன்’ என்றேன். 48. நீங்கள் ஒரு தடவை வழி தவறி (இழக்கப்பட்டு) போகும் வரையில், அது எவ்விதமான ஒரு உணர்ச்சி என்று உங்களுக்குத் தெரியாது. நான், ‘ஓ, பிதாவே, நான் வழிதவறி விட்டேன். நான் தவறாகப் போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை அறிவேன். எந்த வழியில் திரும்புவது என்று எனக்குத் தெரியவில்லை. நான் திரும்ப வேண்டும் என்று அறிந்த ஒரே ஒரு வழி தான் உண்டு, அது தான் பரலோகத்தை நோக்கி, கர்த்தாவே, உம்மை நோக்கிப் பார்த்து, இங்கிருந்து வெளியேற நீர் எனக்கு உதவி செய்யும்படி கேட்கிறேன். நான் உயிரோடிருக்க பாத்திரன் அல்ல; ஆனால் என்னுடைய பிள்ளையும் என்னுடைய மனைவியும் அதற்குப் பாத்திரர்களாயிருக்கிறார்கள், கர்த்தாவே, அவர்களை வாழ வைக்க நான் விரும்புகிறேன்’ என்றேன். நான், ‘பிதாவே, இங்கிருந்து வெளியேற நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஜெபிக்கிறேன், அவ்வாறு செய்வீரா?’ என்றேன். நான் எழுந்து கொஞ்சம் அழுது விட்டு, என்னுடைய தொப்பியை எடுத்து, அதை உதறினேன். அது ஒருவிதமாக தரையில் நனைந்து ஈரமாகி, கொஞ்சம் பனிபடர்ந்து இருந்தது. நான் அதை என்னுடைய தலையில் வைத்து விட்டு, என்னுடைய துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டேன். நான், ‘இப்பொழுது, என்னுடைய அறிவுக்கு எட்டின வரை, நான் இந்த வழியாகத்தான் போக வேண்டும்’ என்றேன். நான் மீண்டுமாக அந்த வழியில் போகத் தொடங்கினேன்; அப்போது என்னுடைய தோளின் மேல் ஒரு கரம் வைக்கப்படுவதை உணர்ந்தேன். 49. நான் திரும்பிப் பார்த்தேன், நான் பார்க்கையில், இவ்விதமாக ஹரிக்கேன் மலையைப் பார்த்தேன். நான் இவ்விதமாக சரியாக பின்னால் கனடாவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன். உடனே நான் அங்கே நின்று கொண்டு, இவ்விதமாக நான் போக வேண்டிய திசையை நோக்கி தொடர்ந்து போனவனாக, ‘ஓ, உமக்கு நன்றி, கர்த்தாவே’ என்று நினைத்தேன். அடுத்து ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு மணி நேரமாக, நான் அப்படியே அந்தத் திசையிலேயே ஏறிச்சென்றேன், அசையவேயில்லை, என்னுடைய திசையை நோக்கிபடி, கவனித்துப் பார்த்துக் கொண்டே, நான் எவ்வளவு நேராகப் போக முடியுமோ அவ்வளவு நேரமாக அந்த இடத்தை நோக்கி ஏறினேன். அப்போது நான் ஹரிக்கேன் மலையின் உச்சியில் இருப்பதை அறிந்தேன், அந்த கோபுரம் அங்கே மேலே இருந்தது. ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் அந்தக் காட்டிலாகா அதிகாரி அங்கே மேலே செல்வார், அவர் தொலைபேசி கம்பிகளை கீழே கொண்டு செல்ல (இழுக்க) நான் அவருக்கு உதவியிருந்தேன், ஆனால் அந்தக் கம்பிகள் இன்னும் கீழே வந்திருக்கவில்லை. அங்கு எங்கேயோ ஒரு கம்பி உண்டென்று எனக்குத் தெரியும். நான் யோசித்துப் பார்த்து விட்டு, நான் அந்த இருளில் என்னுடைய கரங்களை மேலே உயர்த்தினபடி இவ்விதமாக நடந்து போய்க் கொண்டிருந்தேன், அந்தத் தொலைபேசிக் கம்பி, அந்த இரண்டு வரிசை கம்பிகள், அங்கு இருந்ததை அறிந்திருந்தேன், நான் ஏதோவொரு இடத்தில் அதைத் தொட்டேன். நான் தொடர்ந்து என்னுடைய கைகளை மேலே உயர்த்தினபடி நடந்து கொண்டிருந்தேன். 50. நான், ‘அந்தக் கம்பியை மாத்திரம் நான் தொடுவேன் என்றால்’ என்று நினைத்தேன். நான் நின்று திரும்பிப் பார்த்த போது, அது இருளாகவும், பனி பெய்து கொண்டும் இருந்தது, மேலும் வீசிக் கொண்டிருந்தது - காற்றும் வீசிக் கொண்டிருந்தது. நான், ‘ஆமாம், அது சரிதான், இப்பொழுது தான் நேரான திசையில் போய்க் கொண்டு இருக்கிறேன். இதுதான் அது. ஒருநாள் நான் பாவத்தில் இழக்கப்பட்டு போயிருந்தேன். அது உண்மை. நான் தவறான வழியில் போய்க் கொண்டிருந்த நேரத்தில், ஒரு முறை நான் மேலே நோக்கிப் பார்த்தபோது, ஒரு கரம் என்னை கல்வாரியை நோக்கிச் சுட்டிக் காட்டினது’ என்று நினைத்தேன். நான் அவ்விதமாக என்னுடைய திசையைத் தீர்மானித்துக் கொண்டேன். இப்பொழுது நான் என்னுடைய கரங்களை மேலே உயர்த்தினபடி நடந்து கொண்டே, ‘கர்த்தராகிய இயேசுவே, என்னால் ஒரே ஒரு காரியத்தை மாத்திரமே செய்ய முடியும். நான் அந்தக் கம்பியைத் தொடாவிட்டால், நான் இன்னுமாக... இன்று இரவில் என்னுடைய குடும்பமே அழிந்து விடும். இருப்பினும் நான் போக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். கர்த்தாவே, அது சரிதான், நான் போய்க் கொண்டிருக்கையில், நானும் கூட அந்த ஜீவக் கம்பியைத் தொடட்டும்’ என்று நினைத்தேன். 51. சிறிது நேரம் கழித்து, என்னுடைய கைகளில் ஏதோவொன்று பட்டது. நான் அவைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டேன்; அது தான் தொலைபேசி கம்பியாக இருந்தது. என்னால் அந்தத் தொலைபேசிக் கம்பியைப் பிடித்துக் கொண்டே, மலையின் கீழே இறங்க முடியும், அவர்கள் சரியாக அந்தத் தொலைபேசிக் கம்பியின் முடிவில் இருந்தார்கள், அது மலையின் கீழே ஏறக்குறைய ஐந்து மைல்கள் தூரத்தில் இருந்தது. நான், ‘ஓ, என்னே’ என்று நினைத்தேன். அந்தத் தொலைபேசிக் கம்பியை என்னுடைய கைகளால் பிடித்த போது, நான் களிகூர்ந்தவாறு, கூச்சல் போட்டு, கர்த்தரை ஸ்தோத்தரித்தேன். நான், ‘ஓ, நான் என்னுடைய கரத்தினால் அந்தக் கம்பியைப் பிடித்து விட்டதை அறியும் போது, அது எவ்வளவாக நன்றாக உணரச் செய்கிறது. சரியாக அந்தக் கம்பியின் முடிவிலே என்னுடைய அன்பார்ந்தவர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஓ, மகிமை, அது சரியே. நான் இங்கே என்னுடைய இருதயத்தில் ஜீவ கம்பியைப் பெற்றிருந்தேன். இந்தக் கம்பியின் முடிவிலே, என்னுடைய இரட்சகரும், எனக்கு அன்பார்ந்த யாவரும், அதோ அங்கு எங்கோ ஓரிடத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று நினைத்தேன். நண்பர்களே, இன்று நீங்களும் அவ்வாறு உணர்ந்து, நீங்கள் மறுபடியும் பிறவாது இருப்பீர்களானால், நீங்கள் அந்த ஜீவக் கம்பியைத் தொடும் மட்டுமாக உங்கள் கரங்களை மேலே உயர்த்திப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிறகு நீங்கள் மகிமையை அடையும் வரையில், அதைப் பிடித்துக்கொள்ளுங்கள். ஆம், அவர் உண்மை உள்ளவராயிருக்கிறார். 52. அதோ அவர் (இயேசு) இந்தச் சிறிய பழைய சமுத்திரத்தில் அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அவர் தம்முடைய வேலையில் இருப்பதை நான் காண்கிறேன். அங்கே ஒரு ஆத்துமாவுக்கு தேவை இருந்தது. வெறிபிடித்த இந்தக் மனிதனைத் தவிர அந்தக் கதரேனருடைய தேசத்தில் வேறு யாராகிலும் உதவியைப் பெற்றுக் கொண்டார்களா என்று ஒரு-ஒரு குறிப்பும் நமக்குக் கிடையவே கிடையாது. அந்தப் பரிதாபமான மனிதனைக் குறித்து எண்ணிப்பார்க்கிறேன், அவன் அங்கே வெளி இடங்களில் அந்த நிலைமையில் இருந்தான், அவன் அநேகமாக ஒருகாலத்தில் நல்ல பிரஜையாக (நல்ல குடிமகனாக) இருந்த, ஒரு நல்ல மனிதனாக இருந்தான். நாம் ஒரு கணம் அவனுடைய கதாபாத்திரத்தை (character) நாடகப் பாணியில் எடுத்துக் கூடுவோம். அவன் ஒரு அருமையான மனிதனாக இருப்பதாக நான் காண்கிறதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஆனால் இப்பொழுது நீங்கள் (அறியும்) முதலாவது காரியம் என்னவென்றால், ஒரு சில கூட்டம் பேர் அவனோடு சென்று, அவனை சபையை விட்டு விலகச் செய்யவும், அல்லது அவனை தேவனை விட்டு தூரமாகப் போகச் செய்யவும் ஆக்கினார்கள். நீங்கள் அறியும் அடுத்த காரியம் என்ன என்றால், அடுத்த கட்டமாக பிசாசு அவனைப் பிடித்து, அவன் குடிக்கத் தொடங்கினான். ஒருமுறை குடிப்பது, ஒரு பிசாசு. அவன் அப்படியே தொடர்ந்து, பின்வாங்கி தூரமாகப் போய்க் கொண்டிருந்தான். 53. சிறிது காலம் கழித்தபிறகு, பிசாசு அவனைப் பைத்தியம் பிடித்த நிலைக்குத் தள்ளினான். (இவ்வாறாக) அந்த மனிதன் அங்கே வெளியில் இருந்தான். அவன் நிச்சயமாக பயங்கரமான ஒரு மனிதனாக இருந்திருக்க வேண்டும். அவன் அங்கே வெளியே திகிலுட்டும்படியான அந்த இடங்களில் வசித்து வந்தான். அவர்கள் அவனைச் சங்கிலிகளினால் கட்டினார்கள். அவனுடைய பலத்தைப் போல இரண்டு மடங்கு பலம் அவனுக்கிருந்தது. அவனோ தன்னை எதுவும் கட்டாதது போன்று, அந்தச் சிறிய பழைய சங்கிலிகளை உடைத்துப் போட்டு விட்டு, அவனால் வெளியே ஓடிவிட முடிந்தது. இராணுவ படைகளோ, படைத்தலைவர்களோ அவனைக் கட்டினாலும் கூட, அவன் அவைகளை உடைத்துப் போட்டு விட்டுப் போய் விடுவான். அவன் மிகவும் காட்டுமிராண்டியாக இருந்தான்... அது அவனுடைய மனித பலம் அல்ல; அது பிசாசினுடைய பலமாக இருந்தது, அது தான் அதைச் செய்து கொண்டிருந்தது. பிசாசு பலமுள்ளவனாயிருக்கிறான், ஆனால் தேவன் அதிக பலமுள்ளவராயிருக்கிறார். நான், ‘பிசாசுக்குத் தன்னை முழுவதுமாக ஒப்புவித்த ஒரு மனிதனுக்கு தன்னுடைய பலத்தைப் போல் இரண்டு அல்லது மூன்று மடங்கு பலம் இருக்குமானால், எழும்ப முடியாமல் மிக பலவீனத்தோடு படுத்திருக்கும் ஒரு மனிதனுக்கோ, முடமாகிப் போய் எழும்ப முடியாமல் மிக மோசமாக இருக்கும் ஒரு மனிதனுக்கோ, அது என்னவாக இருக்கும், தேவனுடைய பலமும் வல்லமையும் அவனுக்குள் வரும் போது, அவன் என்ன செய்வான்’ என்று நினைத்தேன். பிசாசுக்கு இருக்கிற பலத்தைக் காட்டிலும் தேவனுக்கு எவ்வளவு அதிக பலமிருக்கும். 54. இடுப்பில் பிரச்சனையோடு, அந்தக் கக்கதண்டத்தில் இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கும் நம்முடைய சகோதரியைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன், நீங்கள் பலம் உள்ளவர்களாய் எழும்புவதற்கு தேவனால் எவ்வளவு வல்லமையை உங்களுக்குக் கொடுக்க முடியும், அந்த கக்கதண்டங்களைக் கீழே போட்டு விட்டு, அது இல்லாமலே இங்கிருந்து நடந்துசெல்ல தேவனால் உங்களுக்கு எவ்வளவு விசுவாசத்தைக் கொடுக்க முடியும். உங்களுக்குப் புரிகிறதா? பரிசுத்தாவியின் அபிஷேகம் அங்கு உள்ளே வரும் போது, பலமடைந்து... சிறிய ஜார்ஜி கார்ட்டருடைய சிறு கை கால்கள் ஒரு துடைப்பக்குச்சியைக் காட்டிலும் மிகப்பெரியதாக இருக்கவில்லை என்று கண்டேன். அவள் ஒன்பது வருடம் எட்டு மாதங்களாக அங்கே படுத்த படுக்கையாக இருந்த போது, அவளால்... முடியாதிருந்தது. நோயாளிகளுக்கு விரிக்கும் படுக்கை விரிப்பை (draw sheet) அவர்கள் அவளுக்குக் கீழாக விரிக்க வேண்டியிருந்தது; படுக்கையில் கிடக்கும் நோயாளி மலஜலம் கழிக்க உதவும் பாத்திரத்தில் (bedpan) கூட அவளால் இருக்க முடியவில்லை. தேவனுடைய வல்லமை அவளைத் தொட்ட போது, அவள் அங்கிருந்து வெளியே வந்து, ஓடிச்சென்று ஆர்கன் இசைக்கருவியில் உட்கார்ந்தபடி, ‘இயேசு என்னை சிலுவையண்டையில் வைத்து இருக்கிறார்’ என்ற பாடலை இசைத்துக் கொண்டிருந்தாள். அது உண்மை. 55. இப்பொழுது, அது நடந்து ஒன்பது, ஆமாம், பத்து, பதினொன்று வருடங்களுக்குப் பிறகும், அவள் இன்றும் ஜீவனோடு வாழ்ந்து வருகிறாள். பதினொன்று வருடங்கள் ஆகிறது, அதுமுதற்கொண்டு அவள் இரவில் உறங்குவதற்கு படுக்கைக்குப் போவதற்கே அன்றி வேறு எதற்காகவும் அவள் படுக்கைக்குப் போனதே கிடையாது. அவள் அங்கே ஒன்பதரை வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்து, அவள் பிழைக்கவே மாட்டாள் என்று மருத்துவர்கள் எல்லாராலும் மற்றும் எல்லாவற்றாலும் கைவிடப்பட்டிருந்தாள்: தொண்டை வழியாக காசநோய் பரவி, அவளுடைய பெண்மை சுரப்பிகள் வழியாக முழுவதும் பரவி இருந்தது. அவள் அங்கேயிருந்தாள். அவர்களில் சிலர், ‘சகோதரன் பிரன்ஹாமே, அவள் எவ்வாறு நடந்தாள்?’ என்று கேட்டனர். நான், ‘ஜீவனுள்ள தேவனுடைய வல்லமை தான் அவளை எழுப்பினது’ என்று பதில் அளித்தேன். அவள் அப்படியே தேவனுடைய வல்லமைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தாள். நண்பர்களே, அது தான் தொல்லையாக இருக்கின்றது. இரவு நேரங்களில், நீங்கள் என்னைக் காணும்போது, உங்கள் சகோதரன் தரிசனத்தின் கீழாக இருக்கும்போது, அது பரிசுத்த ஆவியானவருக்கு என்னை நானே சமர்ப்பிப்பதே தவிர இந்த உலகத்திலுள்ள வேறு எதுவும் அல்ல. அப்படியே வியாதியஸ்தராகிய நீங்களும் உங்களைத் தானே பரிசுத்தாவியானவருக்கு முழுமையாக சமர்ப்பிக்க முடிந்தால், நீங்கள் உங்கள் வியாதியைக் குறித்தே மறந்து விடுவீர்கள். 56. நீங்கள் உங்களைத் தானே பரிசுத்த ஆவிக்கு முழுவதுமாக சமர்ப்பிக்கக் கூடும் ஆனால், எந்த உபத்திரவமும் உங்களைப் பிடித்து வைக்க முடியாது. அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையைக் கொண்டு நடக்கிறீர்கள். நீங்கள் சுகமாகி, உங்களுடைய சாட்சியைக் கூறவும், மற்ற எல்லாவற்றையும் செய்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையைக் கொண்டு சுகமாகிறீர்கள். பாவிகளாய் இருக்கிற நீங்கள், ஒருக்கால் குடித்து, புகைபிடித்து, சூதாடி, அவ்விதமான காரியங்களைச் செய்து கொண்டு, நீங்கள், ‘சகோதரன் பிரன்ஹாமே, என்னால் அவைகளை விட முடியவில்லையே’ என்று கூறலாம். ஆமாம், உங்களால் விட முடியும். நீங்கள் ஒருமுறை உங்களைத்தானே அப்படியே தேவனுக்கு சமர்ப்பித்து, உங்களுடைய சுயம் முழுவதையும் தேவனுக்கு விட்டுக் கொடுத்து, என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள். முழு காரியமே அது தான். அங்கே அதில் எந்த இரகசியமும் இல்லை. அது ஒரு ஏமாற்று வித்தையும் அல்ல. ஒரே காரியம் என்னவென்றால், உங்களை நீங்களே தேவனுக்கு சமர்ப்பிப்பது தான். ஆமென். அந்தவிதமாகத்தான் அது இருக்கிறது, அப்போது அது - பிறகு அதற்கு மேலும் அது நீங்களல்ல; அது கர்த்தராக இருக்கிறது. அதற்குப்பிற்பாடு கர்த்தரே அதைச் செய்கிறார். இன்றைக்கு அதற்கான அந்த தருணம் நமக்கு இருப்பதற்காக உங்களுக்கு சந்தோஷம் இல்லையா? 57. அங்கே வெளியேயிருக்கும் இந்த பரிதாபத்திற்குரிய மனிதனாகிய லேகியோனைப் பாருங்கள், ஒருக்கால் சில நேரங்களில் அவனுக்குப் புத்தி தெளிந்திருக்கலாம்; அப்போது அவன் நோக்கிப் பார்த்து, ‘நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்ன-என்ன...’ என்று கூறியிருப்பான். அவனைச் சுற்றிலும் முழுவதும் சங்கிலிகளும் மற்றும் அவ்விதமான காரியங்களும் இருந்து, அவனுடைய சரீரம் முழுவதும் காயப்பட்டிருந்தன என்பதைக் கவனியுங்கள். அப்போதே பிசாசு அவனை அந்த வெறி பிடித்த நிலைக்குத் தள்ளி, அவனை வேதனைப்படுத்த, இதோ அவன் ஓடிப் போகிறான். ஒருக்கால் மறுபடியுமாக அவன் சுயநினைவுக்குத் திரும்பி, ‘எனக்கு ஒரு மனைவியும் பிள்ளைகளும் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறார்கள்’ என்று நினைக்கிறான். நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவென்றால், பிசாசு வேறொரு வெறி பிடித்த நிலைக்குள் அவனைத் தாக்க, இதோ அவன் ஓடுகிறான். அவனால் ஜனங்களின் அருகில் போக முடியுமானால், அவன் ஒரு கொலைக்காரனாக இருந்தான். அவன் அதைச் செய்கிறானா என்பதே அவனுக்குத் தெரியவில்லை; பிசாசு தான் அதைச் செய்து கொண்டிருந்தான். அது உண்மை. 58. பிறகு அந்த மனிதன் அங்கேயிருக்கிறான் என்பதை அநேகமாக இயேசு தரிசனத்தின் மூலம் அறிந்து, அவர் கடலைத்தாண்டி வந்து கொண்டிருந்தார் என்பதைக் கவனிக்கிறோம். அவர் அக்கரையை நோக்கிப் போய்க் கொண்டு இருந்தார், அந்தப் படகை ஓட்டிச் சென்று, அந்தச் சிறிய படகை அங்கே கடலின் அக்கரையில் இருந்த அந்த அலரிச் செடிகள் போன்ற ஒருவகை செடிகளுக்குள் தள்ளத் துவங்கினார்கள். ஏன், அவர்கள் அந்தப் படகை விட்டு, அந்தப் பெரிய படகை (ship) விட்டு வெளியே வந்து, மேலே ஏறிச் செல்லத் துவங்கினார்கள். இதோ, இந்த மனிதன் பிரேதக் கல்லறைகள் இருக்கும் அந்த மயானத்தை விட்டு கீழே இறங்கி வருகிறான். கல்லறைகள், பிசாசு அவனை அங்கே சுற்றிக் கொண்டிருக்க செய்திருந்தான் என்பதைக் கவனியுங்கள், கல்லறைகள் இருக்கும் மயானத்தைச் சுற்றியே அவன் இருந்தான். அது ஒரு... ஓ, அது தான் பிசாசு அடிக்கடி போகிற நல்லதொரு இடமாகும்- மரித்தவைகள் இருக்கும் ஒரு இடத்தைச் சுற்றிலும் தான் அவன் அடிக்கடி போகிறான். இன்றும் ஏறக்குறைய அந்தவிதமாகத்தான் உள்ளது, அதே காரியம் தான். அவன் பழைய மரித்தவர்கள் இருக்கும் ஒரு இடத்தைச் சுற்றியே வசித்து வருகிறான். பாவங்களிலும், மீறுதல்களிலும் மரித்து, கர்த்தர் உடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை விசுவாசிக்காத யாரே ஒருவன், அவன் தான் பிசாசுகள் வசிக்கும் நல்லதொரு இடமாக இருக்கிறான். ஆமென். அது உண்மை. 59. நீங்கள் உண்மை என்னவென்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிற, இந்தப் பழைய குளிர்ந்து போன சடங்காசார சபைகளில் சிலவற்றில் தான் உண்மையாகவே பிசாசுகள் வசித்து வருகின்றன. அது உண்மை. ‘ஓ, அது உணர்ச்சிவசப்படுதல், அவ்வளவு தான். அவைகள் முழுவதும் பைத்தியக்காரத்தனமாகவே உள்ளன. அது மனோசாஸ்திரம் தான்’ என்று கூறுபவர்கள் இருக்கும் இடத்தில் தான் பிசாசு வசிக்கிறான். ஓ, என்னே, அந்தப் பிசாசுகளில் சில உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளும்படி செய்யாது; அவைகளில் சில தாங்கள் எவ்வளவாக இருக்க முடியுமோ அவ்வளவு புத்தி கூர்மையும், மெருகேற்றப்பட்டவைகளாகவும் இருக்கின்றன. ஆமென். அவைகள் கற்றறிந்த மேதைகள். அவைகள் அவ்வாறு இல்லை என்று எண்ணி விடாதீர்கள். ஓ, நீங்கள், ‘சகோதரன் பிரன்ஹாமே, நீர்...’ என்று கூறலாம். ஓ, இல்லை, நானல்ல, நான் வேதப்பிரகாரமாக இதைக் கூறுகிறேன். அந்தப் பிரதான ஆசாரியனும், அந்நாளில் இயேசு கிறிஸ்துவை மறுதலித்த அந்த யூதர்கள் எல்லாரும், அவர்கள் மெருகேற்றப்பட்ட வேதாகம பண்டிதர்களாக இருந்தார்கள். அல்லேலூயா. அந்த அதே பக்தி வாய்ந்த பிசாசு தான் இன்றைக்கும் ஜனங்களுக்குள் இறங்கி வருகிறது. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை அல்லது அந்நிய பாஷைகளில் பேசுதலைக் கேலி செய்ய முயற்சிக்கும் யாரோ ஒருவன்... 60. நான்-நான் ஒரு தர்க்கம் செய்பவனல்ல, பகட்டாரவாரம் செய்பவனுமல்ல, ஆனால் அன்றொரு நாள் அதன் பேரில் அவரை சவாலுக்கு அழைத்தேன் என்று நிச்சயமுடைய வனாயிருக்கிறேன். அவர், ‘அந்நிய பாஷை பேசும் முட்டாள்கள்’ என்று அழைக்கப்படும் ஒரு சிறிய புத்தகத்தை எழுதியிருந்தார். நான், ‘அது முழு கேவலமான தூஷணம்’ என்று கூறினேன். அது முற்றிலும் பரிசுத்தாவியானவரைத் தூஷிப்பதாகும்... யாருமே கிடையாது.. என்று கூற முயற்சித்தார். ‘யோவான் ஸ்நானகன் பரிசுத்தாவியைப்பெற்று இருந்தாலும், அந்நிய பாஷைகளில் பேசவில்லையே. அவர்களில் அநேகரும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தார்களே’ என்றார், மேலும் அதைப் போன்ற மற்ற காரியங்களை யும் கூறினார், சகரியாவும் அவர்களும் அந்நிய பாஷைகளைக் குறித்து எதையும் ஒரு போதும் கூறவில்லையே என்றார். நான், ‘அது பரிசுத்த ஆவி அருளப்படுவதற்கு முன்பு’ என்றேன். ஆம், ஐயா. அவர், ‘நல்லது, அவர்கள்... அதைக் கொண்டிருந்தார்கள் என்று கூறினார்களே’ என்றார். நான், ‘இப்பொழுது, அவர்கள் தாங்கள் பரிசுத்தாவியின் ஞானஸ்நானத்தைக் கொண்டு இருந்ததாக கூறவில்லையே’ என்றேன். 61. ஆதாமும் மறைவாக பரிசுத்தாவியைக் கொண்டிருந்தான். அது உண்மை. தீர்க்கதரிசிகள் எல்லாருமே பரிசுத்தாவியைக் கொண்டே கிரியை செய்தனர். ஆனால்... பரிசுத்தாவியானவர் இன்னும் வந்திருக்கவில்லை என்றும், இயேசு இன்னும் மகிமைப்- பட்டிருக்கவில்லை என்றும் பரிசுத்த யோவான் கூறினான். அது உண்மை. நான் சொன்னேன்... நல்லது, ‘அவர்கள் அந்நிய பாஷைகளில் ஒருபோதும் பேசவே இல்லை’ என்றார். நான், ‘அங்கே அவர்களில் ஒரே ஒருவர் மாத்திரமே அந்நிய பாஷைகளில் பேசினார்’ என்றேன். ‘இயேசு பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தும், அவர் ஒருபோதும் அந்நிய பாஷைகளில் பேசவேயில்லை’ என்றான். 62. நான், ‘ஏன், அவரே பரிசுத்த ஆவியாக இருந்தாரே’ என்றேன். ஆமென். நான், ‘அவர் அந்நியபாஷைகளில் பேசினார்’ என்றேன். ஆமென். நான், ‘யோவான், அந்நியபாஷை யில் பேசவில்லை, ஏனென்றால் அவன் ஒரு போதும்... அந்த யுகத்திற்கு முன்பே அவன் மரித்துப்போனான், நாம் அறிந்துள்ள வரையில், சகரியாவும் மற்றவர்களும் அதற்கு முன்பே மரித்து விட்டனர். ஆனால் இயேசுவோ பரிசுத்த ஆவியாக இருந்த காரணத்தினால், அவர் அந்நியபாஷைகளில் பேசினார்’ என்றேன். அது முற்றிலும் சரியே. அவர் யவீருவின் குமாரத்தியை உயிரோடெழுப்பச் சென்ற போது, அவர் அங்கே நின்று கொண்டிருப்பதைக் கவனியுங்கள். ஜனங்கள் எல்லாரும், ‘நல்லது, இதோ அந்தப் பரிசுத்த உருளையன் வருகிறான். இதோ அந்த மதவெறியன்’ என்று கூறிக் கொண்டு இருந்தனர். அவர், ‘பிள்ளை (damsel) நித்திரையாயிருக்கிறாள்; அவள் மரிக்கவில்லை’ என்றார். அவர்கள், ‘இப்பொழுது தீவிரமாக கவனியுங்கள்’ என்றனர். 63. அவர், அவர்கள் எல்லாரையும் வெளியே தள்ளினார். அங்கே வெளியே... பரிசுத்த ஆவியானவர் எதற்காக பேசுகிறார்? அது நீங்கள் தொல்லையில் அகப்படும் போது தான். சபையானது தொல்லையில் அகப்படும் போது, அப்போது தான் அக்காரியத்தைக் கண்டித்து திருத்த ஒரு செய்தி புறப்பட்டுச் செல்கிறது. கவனியுங்கள், பிறகு இயேசு அங்கே போன போது, வெளியிலிருந்த எல்லாரும் அவரைக் கேலி செய்து கொண்டும், மற்றும் ஒவ்வொன்றையும் செய்து கொண்டு இருந்தனர், பிறகு அவர் வல்லமையால் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் வேறு பாஷையில் பேசி, அந்த ஆவி உலகத்திற்குள் அதை உரைத்து, அந்நிய பாஷைகளைப் பேசுவதன் மூலமாக, மரித்த சிறு பெண்ணின் ஆவியை திரும்ப அழைத்தார். அவர் சிலுவையில் இருந்த போது, அவருடைய சீஷர்களும் அவரைக் கைவிட்டு, அவருடைய சபையும் அவரைக் கைவிட்டு, அவருடைய ஜனங்களும் அவரைக் கை விட்டிருந்த போது... அவர் தேவனாலும் மனுஷராலும் கைவிடப்பட்டு, சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார். அவர் அந்நிய பாஷைகளில் பேசியபடியே மரித்துப் போனார். அது உண்மை. சகோதரனே, அதை முட்டாள்தனம் என்று அழைக்காதே. 64. இந்த பெந்தெகோஸ்தே ஜனங்களைக் குறித்து அவன் கூறினான், அவன், ‘அவர்கள் ஓய்வு நாளைக் கடைபிடிப்பதே இல்லை. அந்த ஸ்திரீகள் தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக்கொள்கின்றனர்’ என்றார். அவர் நிச்சயமாகவே யாத்திரீக பரிசுத்தசபையைச் சேர்ந்த ஒருவராயிருந்தார். அவர், ‘அந்த ஸ்திரீகள் தங்கள் மயிரைக் கத்தரித்து, தங்கள் விரல்களில் ஆபரணங்களை அணிந்து கொள்கிறார்களே’ என்றார். எனக்கு அது தெரியும், அது ஒரு வெட்கக் கேடான செயல். பையனே, அது நன்றாக போகவில்லை. நானும் அவ்வாறே உணர்ந்தேன். ஆனால் அதுவே சத்தியமாயுள்ளது. அது உண்மை. நிச்சயமாகவே, நீங்களும் மற்றவர்களைப் போல அவ்வளவு சடங்காசாரிகளும், தெய்வ பக்தியற்றவர்களுமாயிருக்கிறீர்கள். அது முற்றிலும் உண்மை. நாம் தடை வேலிகளை தகர்த்து போட்டு விட்டோம். நாம் இந்தக் காரியங்களைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. ஆனால், சகோதரனே, நான் உங்களுக்கு இதைக் கூறுகிறேன், அது ஒரு அவமானமாகயுள்ளது, பிரசங்க பீடத்திலிருந்து அதைக்குறித்து பிரசங்கம் பண்ணுவதை நிறுத்தி விட்டார்கள். அது உண்மை. இப்பொழுது, அவ்விதமாகத்தான் அவர்கள் இருந்தார்கள், அவர் அங்கு வெளியே அவ்விதம் இருந்து கொண்டு, அவர் அவ்வாறு செய்து... நான், ‘ஆமாம், அநேக பரிசுத்த யாத்திரீகர்களும் அதே காரியத்தைச் செய்கிறார்கள் என்று நான் காட்டுகிறேன்’ என்றேன். அவர், ‘அவர்கள் ஞாயிற்றுக் கிழமையில் வேலை செய்கிறார்கள், அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்... அவர்கள் ஞாயிற்றுக் கிழமையில் தங்கள் புற்களை வெட்டுகிறார்கள் மற்றும் அதைப் போன்றவைகளையும் செய்கிறார்கள்’ என்றார். 65. நான், ‘நீங்கள் வெவ்வேறு கேள்விகளைக் கேட்கவோ, அல்லது வெவ்வேறு சபைகளைக் குறித்து தர்க்கம் பண்ணவோ விரும்பினால், யாத்திரீக பரிசுத்தர்களும் அவ்வாறே செய்கிறார்களே’ என்றேன். ஆனால் நான், ‘இதோ பாரும், சகோதரனே, முதற்கண் ஓய்வு-நாள் என்றால் என்ன, என்பதுகூட உமக்குத்தெரியவில்லை’ என்றேன். ஓ, அவர், ‘அது ஞாயிற்றுக் கிழமை’ என்றார். நான், ‘அப்படியா?’ என்றேன். அவர், ‘அப்படியானால் நீர் ஏழாம் நாள் ஆசரிப்புக்காரர் என்று நினைக்கிறேன்’ என்றார். 66. நான், ‘இல்லை, ஐயா. ஆனால் ஓய்வு நாள் என்றால் என்ன என்பது உமக்குத் தெரியவில்லை. ஓய்வு-நாள் என்றால் என்ன என்பதைக் குறித்து நான் காண்பிக்கட்டும்’ என்றேன். நான், ‘ஏசாயா 28:18ல், அவன்... இன்று போலவே, கர்த்தருடைய போஜன பீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்துள்ளதாக தீர்க்கதரிசி கூறியிருக்கிறான். ‘நான் யாருக்கு உபதேசத்தைப் போதிப்பேன், யாரை அறிந்து கொள்ளச் செய்வேன். கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும் இருக்க வேண்டும்; எது நன்மையானதோ அதை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். பரியாச உதடுகளினாலும் (திக்கிப் பேசும் உதடுகளினாலும்), அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன். அவர்கள் கேட்க வேண்டுமென்று நான் சொன்ன இளைப்பாறுதல் இதுவே’ என்றான்’ என்று கூறினேன். நான், ‘நாங்கள் கடைபிடிக்கவில்லை என்று நீர் நினைக்கிற அதே காரியத்தையே நீர் குறை கூறிக் கொண்டிருக்கிறீர்’ என்றேன். அல்லேலூயா. அது உண்மை. நான், ‘சகோதரனே, கவலைப்படாதீர்கள். எங்கள் கப்பல்களை நாங்கள் கல்வாரியை நோக்கி ஓட்டிக்கொண்டிருக்கிறோம், பரிசுத்தாவியானவர் சரியாக அவைகளை நோக்கி காற்றை வீசிக் கொண்டிருக்கிறார். அது உண்மை. அது தான் இளைப்பாறுதல் (ஓய்வு); ஓய்வு நாளைக் கடைபிடிப்பது என்பது அதுவே’ என்றேன். 67. இயேசு, ‘வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்றார். அவர் இந்த ஜனத்தோடே பேசுகிற பரியாச உதடுகளும் (திக்கிப்பேசும் உதடுகளும்), அந்நிய பாஷையும் தான் இளைப்பாறுதல் என்று ஏசாயா கூறியிருக்கிறான். இதுவே ஓய்வு நாளைக் கடைபிடிப்பது. இப்பொழுது, அதைக் குறித்து என்ன? அது எப்படி-? அது எங்கே எப்பொழுது மாறிப் போனது, அல்லது வேறு ஏதாவதா-? அதே கூற்று உண்மை தான் என்று இயேசு நிரூபித்தார். அதே கூற்று உண்மை தான் என்று எபிரெயர் 4-ம் அதிகாரத்தில் பவுலும் நிரூபித்தான். அவன், ‘தேவன் ஏழாம் நாளைக் குறித்து சொல்லியிருக்கிறார், ‘நீங்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்கும் போது, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாது இருங்கள்’ என்று வெகுகாலத்திற்குப் பின்பு தாவீதுக்குச் சொல்லியிருக்கிறபடி பின்னும் வேறொரு நாளைக் குறித்திருக்கிறார்’ என்றான். 68. அது உண்மை. பரிசுத்த ஆவியானவர் உட்பிரவேசித்தல்... ‘நமக்காக’ என்றேன், அது தான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருத்தல், ‘அதைக் கொண்டிருப்பது... நாம் கிறிஸ்துவை நம்முடைய இருதயத்தில் பெற்றுக் கொள்ளும்போது, தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தது போல, நாமும் நம்முடைய கிரியைகளை முடித்திருக்கிறோம்.’ அது உண்மை. அவ்விதமாகத்தான் காரியம் உள்ளது. உண்மையாகவே ஓய்வு நாளைக் கடைபிடிப்பது அங்கு தான் இருக்கிறது. நான் என்ன கூற விரும்புகிறேன் என்று புரிகிறதா? அது பரிசுத்த ஆவியானவர் உள்ளே வரும் போது, அப்போது உங்கள் விசுவாசத்தின் முத்திரையை தேவன் உங்களுக்குக் கொடுக்கிறார். இப்பொழுது, இந்த எல்லா காரியங்களும்... ஒருக்கால் பரிதாபத்திற்குரிய இம்மனிதன் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டும் (குறைகூறப்பட்டும்), எல்லாமும் செய்யப்பட்டிருந்தான். இயேசு நடந்து வந்து கொண்டிருந்தார், இதோ அவன் அங்கே வெளியேயிருந்து, தன்னைத் தான் காயப்படுத்திக்கொண்டும், தன்னைத்தான் சித்தரவதை செய்து கொண்டும், அவ்விதமாகச் செய்து கொண்டேயிருந்தான். அவன் அந்நிலையில் இருப்பதை இயேசு கண்டு, அவனண்டையில் நடந்து வரத் தொடங்கினவுடனே, அந்த மனிதன் மிகவும் பக்தியுள்ளவனாக இருக்க விரும்பினான். பிசாசு அவ்விதமாகத்தான் செய்கிறான். 69. பிசாசு அவனால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பக்தியுள்ளவனாயிருக்கிறான், அவன் புத்திசாலியாகவும், கற்றுத் தேர்ந்த மேதையாகவும் பண்டிதனாகவும், மெருகேற்றப்பட்டவனாகவும் இருக்கிறான், ஆயினும் பனிக்காலணிகளைக் குறித்து ஒரு குழி முயலுக்குத் தெரிவதைக் காட்டிலும், அவர்களுக்கு தேவனைக் குறித்து அதிகம் தெரியாது. இதோ அவன் இவ்விதமாக நடந்து வந்து, தரையில் விழுந்து இயேசுவைப் பணிந்து கொள்கிறான், இந்த வெறிபிடித்த மனிதன் தான் அவ்வாறு செய்தான். நல்லது, நீங்கள், ‘பிசாசா அவ்வாறு (செய்தான்)?’ என்று கேட்கலாம். ஏன், யூதாசும் கூட வந்து அவரை முத்தம் செய்து, ஒரு முத்தத்தினாலே அவரைக் காட்டிக் கொடுத்தானே. பக்தியுள்ள ஆவிகள், நிச்சயமாகவே அவைகள் பக்தியுள்ளவைகள் தான். யாரோ ஒருவர், ‘நல்லது...’ என்றார். இந்த மனிதர் தொடர்ந்து எழுதி, ‘ஏன், பக்தியுள்ள ஆவிகள், அந்த பெந்தெகோஸ்தே ஜனங்களிடம் போய் விடாதீர்கள். அவ்வாறு செய்வீர்களானால், அந்த ஆவி உங்களையும் பிடித்துக் கொள்ளும். அது பிசாசினுடையதாயிருக்கிறது’ என்றார். அது பிடித்து விட வேண்டாம்... அது உண்மை. 70. கவனியுங்கள். அவர், ‘அங்கே... எல்லா ஆவிகளையும் நம்ப வேண்டாம், ஆனால் அவைகள் தேவனால் உண்டானதா என்று பார்க்கும்படி, அவைகளை சோதித்துப் பாருங்கள் என்று வேதாகமம் கூறுகிறது’ என்றார். அதைத் தான் சரியாக வேதாகமம் கூறுகிறது. இயேசு, ‘விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்’ என்று கூறினார். அது சரியா இல்லையா என்று அந்த ஆவியைக் கொண்டு அதை சோதித்துப் பாருங்கள். நிச்சயமாக. இந்த பக்தியுள்ள ஆவியானது காலத்தின் துவக்கம் முதற்கொண்டு முடிவு மட்டுமாக எப்போதும் மறுதலிக்கிற ஒன்றாகவே இருந்து வருகிறது. பக்தியுள்ள பிசாசுகளின் ஆவியானது உண்மையான நிஜமான ஆவியைப் புறக்கணித்துத் தள்ளியிருக்கிறது. தேவனுடைய ஆவி வருகிற ஒவ்வொரு தடவையும், அடையாளங்களும் அற்புதங் களும் அந்த ஆவியைப் பின்தொடருகின்றன. அங்கே முற்காலத்தில் காயீன் தொழுது கொண்ட அந்நாட்களைக் கவனித்துப் பாருங்கள். அவன் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்திருந்தான். அவன் ஒரு பலிபீடத் தைக் கட்டினான்; அவன் ஒரு சபையைக் கட்டினான்; ஆதா... ஆபேல் எவ்வளவு பக்தியுள்ளவனாக இருந்தானோ அவ்வளவு அவனும் அவ்வளவு பக்தி உள்ளவனாக இருந்து ஒவ்வொன்றையும் கட்டினான். ஆனால் கவனியுங்கள், இதோ ஒரு சிறிய ஏதோவொன்று... நான் என்னுடைய பாடத்தை விட்டு விலகிச் செல்கிறேன்; எப்படியும் அதில் தொடர வேண்டுமென்று நான் நோக்கம் கொள்ளவில்லை. 71. எனவே கவனியுங்கள், காயீன் மற்றும் ஆபேலின் நாட்களைக் கவனியுங்கள், ஆபேல் எவ்வளவு பக்தியுள்ளவனாக இருந்தானோ அவ்வளவு காயீனும் பக்தியுள்ளவ னாக இருந்தான். மேலும் கவனியுங்கள், அவன் தொழுது கொண்ட போது, அவன் தன்னுடைய பலிபீடங்களைக் கட்டினான்; அவன் அதை ஒரு அருமையான பெரிய சபையைப் போல அழகுபடுத்தினான். அவன்-அவன் ஒரு அவிசுவாசி அல்ல; அவன் முழங்கால்படியிட்டு, ஆராதித்தான். தேவனோ அவனை முற்றிலும் புறக்கணித்து விட்டார். தேவன் நீதிபரராயிருந்து அவரிடத்தில் விசுவாசம் கொண்டிருப்பது மட்டுமே அவருக்குத் தேவையாயிருந்து, விசுவாசம் மட்டுமே அவருக்கு அவசியமாயிருந்து, பலியை மாத்திரமே அவர் எதிர்பார்த்து, சபையில் அங்கத்தினராய் இருப்பது மாத்திரமே அவருக்கு அவசியமாயிருந்திருக்குமானால், அந்தப் பையனைக் குற்றவாளி என்று தீர்த்த போது, தேவன் அநீதியுள்ளவராக இருந்திருப்பார். அவன் முற்றிலுமாக தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருந்த ஒருவனாயிருந்தான். அவன் அதையே வெளி அரங்கமாய் அறிக்கையிட்டான், அவன் தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருந்த ஒருவனாயிருந்தான். அவன் கர்த்தருக்கு ஒரு சபையை, ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அவன் தன்னுடைய கனிகளை உள்ளே கொண்டு வந்து, அதை அழகாக ஆக்கி, பலியிட்டு, நன்றி கடன் செலுத்தி, கர்த்தரைத் தொழுது கொண்டான். சகோதரனே, அதுவே இன்றுள்ள ஒரு அருமையான நல்ல சபை அங்கத்தினனாயிருக்கிறது. அது சரிதானா? தேவனோ அவனைப் புறக்கணித்து விட்டார். 72. ஆனால் கவனியுங்கள், இதோ ஆபேல் வருகிறான், கிரியைகளைக் கொண்டல்ல. அவன் ஒரு சிறிய திராட்சைக் கொடியை இந்த ஆட்டினுடைய கழுத்தைச் சுற்றிலும் கட்டிக் கொண்டு, இதோ அவன் அதை அங்கே இழுத்துக் கொண்டு வந்து, அதை பலிபீடத்தின் மேல் கிடத்தி, அதனுடைய தொண்டையை அடிக்கத் தொடங்கி, அதைக் கொன்றான். ஏன்? ஆபேலுக்கு ஒரு வெளிப்பாடு இருந்தது. நாம் அதை சற்றே ஒரு நிமிடம் அதை உறிஞ்சும்படி செய்து கொண்டிருக்கிறோம். ஆபேலை நீதிமானாக ஆக்கியிருந்த ஒரு வெளிப்பாடு அவனுக்கு இருந்தது. சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு என்ன அவசியமாயிருந்தது என்ற ஒரு வெளிப்பாடு அவனுக்கிருந்தது, அவன் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்தான். நீங்கள் எப்பொழு தாகிலும் தெய்வீக சுகமளித்தலையோ, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையோ காண முடியும் என்றால், அதற்கு ஒரே வழி தான் இருக்கிறது, அது வெளிப்பாட்டின் மூலமே. அவர்கள் அந்த மலையை விட்டு கீழே இறங்கி வந்த போது... இதோ அது இருக்கிறது, நான் அதை நிரூபித்துக் காட்டுகிறேன். அவர்கள் அந்த மலையை விட்டு கீழே இறங்கி வருகையில், இயேசு, ‘மனுஷர் என்னை யாரென்று சொல்லுகிறார்கள்?’ என்று கேட்டார். நல்லது, அவர்களில் சிலர், ‘நீர் எலியா’ என்றார்கள். மற்றவர்கள், ‘ஏன், நீர் தீர்க்கதரிசிகளில்(ஒருவர்)’ என்றார்கள். இப்பொழுது எலியாவின் சால்வையையும் மற்றவைகளையும் தங்களுடைதாக்கிக் கொள்ள அவர்கள் முயற்சிப்பது போன்றே உள்ளது, அந்தக் காரியங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். அவர்கள் அந்த நாட்களிலும் அதே ஆவிகளைக் கொண்டிருந்தனர்; அவர்கள் இன்றும் அப்படியே வாழ்ந்து வருகின்றனர். 73. ‘நீர் எலியா என்று சிலர் சொல்லுகிறார்கள், நீர் தீர்க்கதரிசி என்று சிலர் சொல்லுகிறார்கள், நீர் இது அது, அல்லது அது மற்றது என்று சிலர் சொல்லுகிறார்கள்.’ அதற்கு அவர், ‘ஆனால் நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?’ என்று கேட்டார். பேதுரு, ‘நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து’ என்றான். அவர், ‘யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், எந்த வேதாகமக் கல்லூரியும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. எந்த வேத சாஸ் - எந்த வேத சாஸ்திரியும் ஒரு போதும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என்னுடைய பிதாவானவரே இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை’ என்றார். இது என்ன? இது தான் தேவனைக் குறித்த வெளிப்பாடு. அவ்விதமாகத்தான் காரியம் உள்ளது. தேவன் ஆவியானவரைக்கொண்டு பாவிக்கு சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். ‘இந்தக் கல்லின் மேல் (தேவனைக் குறித்த ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல்) என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள முடியாது.’ எனவே நீங்கள் விரும்பும் எல்லாவற்றாலும் அவர்களை அழைக்கிறபடி, அந்தப் பரிசுத்த உருளையர்களோடு நீங்கள் எதிர்த்து நிற்கலாம்; தேவனுடைய சபையோ அதை மேற்கொண்டு - சரியாக காலத்தின் முடிவை நோக்கி தொடர்ந்து முன்னேறிச் செல்லும். ஆம், ஐயா. 74. அவர்கள் எப்போதுமே சுகமளித்தல்களையும் அடையாளங்களையும் அற்புதங் களையும் கொண்டிருப்பார்கள்; காலங்களினூடாக தேவனே அவர்களோடு கிரியை செய்து வந்தார். நீங்கள் அங்கே பின்னால் நோக்கிப் பார்த்து, பரிசேயர்கள் என்ன செய்தார்கள் என்றும், அவர்கள் அதற்கு விரோதாய் எதிர்த்து நின்றார்கள் என்பதையும் பாருங்கள். அவர்கள் எங்கே போய் விட்டனர் என்றும் பாருங்கள். அந்தக் குழுவோடு தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம், அதைத் தாண்டி இங்கே வருவது தான் நல்லது. அந்த... எங்கே என்று பாருங்கள். ஓ, அவர்கள் கற்றுத் தேர்ந்த மேதைகளைக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் நல்ல மேய்ப்பர்களைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இடம் புத்திசாலிகளும், கல்வி கற்றவர்களும், ஒவ்வொன்றுமே இருந்தன. அவர்கள் அந்த நாளில் அவர்களுக்கு அவசியமாயிருந்த ஒவ்வொன்றையும், நாம் இப்பொழுது பெற்றிருப்பதற்கும் மேலாக மிகவும் அதிக பாண்டித்தியத்தைக் கொண்டிருந்தார்கள். ஒரு மனிதன் கூட மிகவும் பரிசுத்தமாக இருக்க வேண்டியிருந்தது. அவன் ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தில் பிறந்தவனாய் இருக்க வேண்டியிருந்தது, அல்லது அவனால் ஒரு ஊழியக்காரனாக கூட இருக்க முடியவில்லை. அவர்கள் அவ்விதமாக ஒவ்வொன்றையும் கொண்டிருந்தார்கள், ஆயினும் அவர்கள் வந்த போது, இயேசு, ‘உங்களைப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்றார். ‘நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்’ என்றார். அது சரியா? ஆம், ஐயா, மெருகேற்றப்பட்ட அறிவாளிகள்... எனவே பக்தியுள்ள ஆவிகள், ஒரு மனிதனைக் காயப்படுத்தி, அவனை வெறி பிடிக்க வைப்பதற்குப் பதிலாக, அவன் புத்தி கூர்மையுள்ள அறிவாளியாகவும் மேதையாகவும் கூட இருக்க முடியும். அவன் இயேசுவைச் சந்தித்த போது, அந்தப் பிசாசைக் கவனியுங்கள். அவன், ‘தேவனுடைய குமாரனே, இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி கட்டளையிடும்’ என்றான். இயேசு, ‘மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் பிழைப்பதில்லை என்று எழுதியிருக்கிறதே’ என்றார். 75. அவரை உயர கொண்டு சென்று, ‘ஓ, எனவே அவர் பாண்டித்தியத்தில் என்னோடு கூட பங்கு கொள்ள விரும்புகிறார், ஊ. என்னுடைய பட்டங்களையும் கூட நான் அவருக்குக் காண்பிப்பேன்’ என்றான். எனவே அவன் அவரை தேவாலயத்து உப்பரிகையின் மேல் கொண்டு போய், ‘தம்முடைய தூதர்களுக்கு (உம்மைக் குறித்துக்) கட்டளையிடுவார் என்றும், எந்த நேரமும் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்றும் எழுதியிருக்கிறதே’ என்றார். இயேசு, ‘இப்படியும் கூட எழுதியிருக்கிறதே’ என்றார். ஆமென். ஆம், ஐயா. சரி, அவ்விதமாகத் தான் காரியங்கள் உள்ளன. பிசாசு எவ்வளவு புத்தி கூர்மை உள்ளவனாகவும், கற்றறிந்த மேதையாகவும் இருக்கிறான் என்று புரிகிறதா? பக்தியுள்ள ஆவி, ஆனால் இதுவே ஒரே வழி, உங்களுக்கு அது தெரியும். அது தான் ஒரே வழி... பிலேயாம் இஸ்ரவேலரைச் சபிக்க வந்த போது, அவன் பலி செலுத்தின நேரத்தில், அவன் ஏழு பலிபீடங்களைக் கட்டினான். அங்கேயிருந்த அந்தப் பரிசுத்த உருளையர் களான இஸ்ரவேலர்களும் சரியாக அதையே கொண்டிருந்தனர். அவர்கள் பரிசுத்த உருளையர்களாக இருந்தார்கள். 76. நீங்கள், ‘இஸ்ரவேலர்கள் பரிசுத்த உருளையர்களாக இருந்தார்கள் என்று என்னிடம் கூறுகிறீரா?’ என்று கேட்கலாம். இன்று அவர்களிடம் இருப்பது போன்று அதேவிதமாக. ஆபேல் எழும்பின போது, ஆபேலிடத்தில் இருந்த அதே ஆவி தான் அது. காயீன் இடமிருந்த அதே ஆவியும் அங்கேயிருக்கிறது. அப்படியே அதே ஆவி தான். கவனியுங்கள். அவர்கள் இங்கே மேலே வந்த போது, பரிசுத்த உருளையர்கள் என்று அவர்களை அழைத்தனர். ஏன், அவர்கள்... அந்த... தேவன் ஒரு அற்புதத்தை நடப்பித்து, செங்கடலைப் பிளந்து, அவர்களைக் கடந்து போகச் செய்தார், அப்போது மோசே ஆவியில் பாடினான். மிரியாம் தம்புருவை எடுத்து, கடற்கரையில் ஓடி, நடனம் பண்ணினாள், இஸ்ரவேல் குமாரத்திகளும் அவளைப் பின்பற்றி, ஆவியில் நடனமாடினார்கள். அது ஒரு கூட்டம் பரிசுத்த உருளையர்களாக இல்லாதிருக்குமானால், நான் அப்படிப்பட்ட எதையும் ஒருக்காலும் கண்டதில்லை. அது சரியே. நான் உங்களைச் சற்று உற்சாகப்படுத்த விரும்புகிறேன்: அவர்களும் கூட எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்தவர்களல்ல (interdenominational) ஆம், அவர்கள் அவ்வாறு தான் இருந்தார்கள். அவர்கள் ஸ்தாபனங்கள் எதையும் சேர்ந்தவர்களல்ல. ஆமென். அவர்கள் எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்தவர்களல்ல, ஏனென்றால் அவர்களுக்கு ஒரு தேசம் கூட இருக்கவில்லை. இப்பொழுது, இதோ அவர்களுடைய சகோதரன் நிற்கிறான், அவர்கள் எவ்வளவு அடிப்படைவாதிகளாக இருந்தார்களோ, அவ்வளவு அடிப்படைவாதிகளாக இவர்களும் இருந்தார்கள். 77. குமாரன்... லோத்தின் குமாரத்தி பிள்ளைகளைப் பெற்றாள், அவர்கள் தான் மோவாபு புத்திரர்கள், அவர்கள் அங்கே மோவாபியர்களைக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து தான் அவர்கள் சந்ததி வருகிறது. அங்கே மேலே அவர்களுக்கு ஒரு பிரசங்கி, ஒரு-ஒரு தீர்க்கதரிசி, ஒரு கற்றறிந்த மேதையாகிய பாலாக் இருந்தான். அவன் இறங்கி வந்த போது, அந்நியபாஷையில் பேசுவது சரிதான் என்று கர்த்தர் அவனுக்குக் காண்பிக்க முயற்சித்தார். அவர் அதை ஒரு கோவேறு குழுதையின் மூலமாக (கற்றுக்) கொடுக்க வேண்டியிருந்தது, ஆனால் அவன் எப்படியும் தன்னுடைய உபதேசத்தில் தவறாய் இருந்தான் என்பதை அவனுக்குக் காண்பிக்க அங்கே அதைப் பெற்றான். ஆனால் இதோ அவன் எப்படியும் கீழே இறங்கி வருகிறான். எனவே அவன் அப்படியே அதற்கு மேலாக நடந்து சென்றான். அவன் அங்கு போன போது, அவர்கள், ‘இப்பொழுது, நான் உங்களுக்குக் கூறுகிறேன், யேகோவாவுக்கு ஏழு பலிபீடங்கள் தேவை’ என்றார்கள். எனவே அவன் போய் ஏழு பலிபீடங்களைக் கட்டினான். அவன், ‘இப்பொழுது, நாம் பார்க்கலாம், அவர் ஏழு சுத்தமான பலிகளையும், ஏழு காளைகளையும் கொண்டிருக்க வேண்டும்’ என்றான். 78. இப்பொழுது, அவன், ‘எனக்கு ஏழு ஆட்டுக்கடாக்கள் வேண்டும், ஏனென்றால் ஏதோ ஓரு நாளில், அவர் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை அனுப்பப் போகிறார்; இந்த செம்மறி ஆட்டுக்கடாக்கள் அவரைக்குறித்து தான் பேச வேண்டிதாய் இருக்கிறது. எனவே சரியாக அந்தப் பரிசுத்த உருளையர்கள் செலுத்திக் கொண்டிருந்த அதே பலியாகிய ஏழு ஆட்டுக்கடாக்களை அவனும் செலுத்தினான். பாருங்கள்? அங்கே... ‘நல்லது, அவர்கள் ஒரு ஸ்தாபனமாகக் கூட இருக்கவில்லை. அவர்களைக் கவனியுங்கள். ஏன், நாமோ ஒரு தேசமாயிருக்கிறோம். அவர்கள் ஒரு தேசமல்ல; அவர்கள் kent- கூடாரங்களில் (tent) வாசம் பண்ணுபவர்கள். நல்லது, அவர்களைக் கவனியுங்கள்’ என்றான். ‘அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்களாகவும், வெறுக்கத்தக்க கோபம் கொண்டவர்க ளாகவும் இருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் எவ்வளவு இழி நிலையில் இருக்கிறார்கள் என்று பாருங்கள்’ என்றான். ஆனால் அவர்கள் மேல் தொங்கிக் கொண்டிருந்த அந்த அக்கினிஸ்தம்பத்தை அவன் காணத் தவறி விட்டான். அது அவனுக்குக் குருடாயிருந்தது. அவன் அதைக் காணவில்லை. ஓ. அல்லேலூயா. நீங்கள் எப்படியும் என்னை பரிசுத்த உருளையர்கள் என்று தான் அழைக்கப் போகிறீர்கள்; நான் பரிசுத்த உருளையன் தான். கவனியுங்கள், அவன் சொன்னான்... கவனியுங்கள், அவனால் அதைக் காண முடியவில்லை. ஆனால் அவன், ‘இப்பொழுது, நான் அடிப்படைவாதி. எனவே நான் அடிப்படைவாதி என்று எனக்குத் தெரியும், எனவே நான் இந்த பலிகளைச் செலுத்துவேன்; யேகோவா அவ்வாறு தான் சொல்லியிருக்கிறார். நான் போய் அங்கே கீழேயுள்ள ஜனங்களைச் சபிப்பேன், அவ்வளவு தான்... அங்கே நடத்திக் கொண்டு இருக்கும் அந்த எல்லாம் - அவர்கள் அந்த எல்லா சுகமளிக்கிற ஆராதனைகளையும் காரியங்களையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்று நினைத்தான். 79. சுகமளிக்கிற ஆராதனைகளா? நிச்சயமாக, அவர்கள் சுகமளிக்கிற ஆராதனைகளைக் கொண்டிருந்தனர். மோசே வெண்கல சர்ப்பத்தை மேலே உயர்த்தி வைத்தான், வியாதிப் பட்டிருந்த ஒவ்வொருவரும் போய் அதை நோக்கிப் பார்த்து, சுகமடைந்தார்கள். அது சரி தானா. அவர்களிடம் எல்லாவிதமான அடையாளங்களும் அற்புதங்களும் இருந்தன. அது தான் அவர்களை அவர்கள் இருந்த விதமாக ஆக்கினது. தேவன் அவர்களோடு இருந்தார் என்பதன் நிரூபணமாக அது இருந்தது, அடையாளங்களும் அற்புதங்களும் அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தன. அவன், ‘நான் அங்கே கீழே போய் அவர்களை சபிப்பேன்’ என்றான். எனவே அடிப்படைவாதியாக பேசுவோமானால், அவர்களும் மற்றவர்களைப் போல அவ்வளவு அடிப்படைவாதிகளாக இருந்தனர். எனவே அவன் தன்னுடைய பெரிய பலியைச் செலுத்தினான், அவன் இறையியலில் டாக்டர் பட்டம் (Doctors of Divinity) பெற்ற எல்லாரையும் சுற்றிலும் வரவழைத்தான். அவர்கள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர், அந்த தேசத்தின் பிரபுக்களும் புகைந்து கொண்டிருந்த அந்த பலிகளைச் சுற்றிலும் நின்று, ‘மகத்தான யேகோவா, இப்பொழுது இறங்கி வாரும். நாங்கள் எவ்வகைப்பட்ட ஜனங்கள் என்று உமக்குத் தெரியும், நாங்கள் கற்றறிந்த மேதைகள், நாங்கள் ஒரு மகத்தான தேசமாயிருக்கிறோம், நாங்கள் மகத்தான ஜனங்கள். எங்களுக்கு மகத்தான சபைகள் உள்ளன; எங்களுக்கு இங்கே மகத்தான காரியங்கள் உள்ளன. அங்கே அந்த ஒரு கூட்டம் உதவாத குப்பைகள் கீழேயிருந்து மேலே வந்து கொண்டிருக்கின்றனர், கர்த்தாவே, அவர்களை சபியும். அந்த உபதேசம் இங்கே இந்தப் பட்டணத்தைச் சுற்றிலும் பரவிச் செல்ல விடாதேயும். எங்களுக்கு அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது’ என்றார்கள், அவ்விதமாகக் கூறிக் கொண்டிருந்தார்கள். ‘ஓ, மகத்தான யோகோவா, அதை நிறுத்தி விடும்.’ ‘இப்பொழுது, தீர்க்கதரிசியே, முன்னே சென்று தீர்க்கதரிசனம் உரையும்’ என்றனர். பிலேயாம், ‘சற்று பொறுங்கள், நான் அதைச் செய்வேன்’ என்று கூறி விட்டு, அவன் அங்கிருந்து தூரமாகச் சென்றான். 80. தேவன் அங்கே வெளியே அவனைச் சந்தித்து, ‘ஏன், நீ இங்கு வந்து அந்தச் சிறிய பாகத்தைப் பார்க்காதே. அதனுடைய மோசமான பாகத்தைத் தான் அவன் உனக்குக் காண்பித்தான். நீ திரும்பிச் சென்று பேசு, ஆனால் நான் உன் வாயில் வைப்பதைத் தவிர வேறு எதையும் பேசாதே’ என்றார். அவன், ‘சரி, கர்த்தாவே’ என்றான். அவன் அங்கு போய் சேர்ந்த போது, அவன் துரிதமாக அங்கே கீழே திரும்பிச் சென்று, அவன், ‘ஓ இஸ்ரவேலே, நீ பாக்கியவான். அந்தக் கூடாரங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவைகள். அவர்கள் எவ்வளவு நீதிமான்களாய் இருக்கிறார்கள். இதோ மலையுச்சியிலிருந்து நான் உன்னைப் பார்த்தும், உன்னிடத்தில் எந்த அக்கிரமத்தையும் நான் காணவில்லை’ என்றான். அல்லேலூயா. அங்கே தான் நீங்கள் அழைக்கிறபடி, ஒரு கூட்டம் வெறி பிடித்தவர்கள், ஒரு கூட்டம் பரிசுத்த உருளையர்கள் இருக்கின்றனர். என்ன வித்தியாசம். அடிப்படை ரீதியாகப் பேசுவோமானால், அங்கே கீழே பள்ளத் தாக்கில் இருந்த அவர்கள் எவ்வளவு அடிப்படைவாதிகளாக இருந்தார்களோ அவ்வளவு அடிப்படைவாதிகளாக மலைப்பகுதியிலிருந்த அந்தக் கூட்டம் ஜனங்களும் இருந்தனர். ஆனால் அதைக் குறித்த வித்தியாசம் என்னவென்றால், அவர்களைப் பின்தொடர்ந்த அடையாளங்களைக் கொண்டும், அற்புதங்களைக் கொண்டும் தேவன் அவர்களை நிரூபித்துக் கொண்டு வந்தார். பவுல், ‘கடைசி நாட்களில், அவர்கள் துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர் களாயும், சுகபோகப் பிரியராயும், தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு’ என்று கூறினான். 81. இயேசு, ‘விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என்னுடைய நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள் அல்லது சாவுக்கேதுவான வைகளைக் குடித்தாலும், அது அவர்களைச் சேதப்படுத்தாது. அவர்கள் வியாதி யஸ்தர் மேல் தங்கள் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தம் அடைவார்கள்’ என்றார். ஓ, என்னுடைய சகோதர சகோதரிகளே, துணிவுடன் இருங்கள்; உங்களைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் ஏதோவொன்றை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். பெருமழையின் இரைச்சலை நீங்கள் கேட்பீர்கள். இந்நாட்களில் ஒன்றில், பரலோகத்திலிருந்து அந்த திரைகள் பின்னால் இழுக்கப்படும், பரிசை வெல்லும்படி போராடி, இரத்தக் கடலினூடாகப் பிரயாணம் செய்த அந்தக் கூட்டம் ஜனங்கள் மேல் தேவன் தம்முடைய ஆவியை அளவில்லாமல் ஊற்றுவார். அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தையே நாம் கொண்டிருப்போம். ஆம், ஐயா. 82. அவர்கள் பக்தியுள்ள பிசாசுகளாய் இருந்து விட்டு, நாம் தான் பிசாசுகள் என்று கூற முயற்சிக்கிறார்கள். தேவன், ‘விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்; அவர்கள் இறையியலில் டாக்டர் பட்டம் (D.D.'s) பெற்றிருப்பார்கள்’ என்றா கூறினார். வேதாகமம் அவ்வாறு கூறுவதாக உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ‘அவர்கள் வேதாகம கல்லூரிகளிலிருந்து வெளியே வந்து, மிகவும் பக்தியு உள்ளவர்களாய் இருந்து, ஒரு புறா வால் (pigeon-tailed) கோட்டை அணிந்து கொண்டும், ‘ஆமென்’ என்று கூறிக் கொண்டும் தங்கள் சபைக்கு மிகவும் அழகாக நடந்து போவார்கள்.’ இவை எல்லாவற்றையும் பழக்கப்படுத்திக் கொள்ளுகிறார்கள், ‘அவர்கள் மரியே வாழ்க என்று இருமுறை கூறுவார்கள் அல்லது அவர்கள் இதை அல்லது அதை செய்வார்கள்.’ அங்கே அப்படிப்பட்ட ஒரு காரியம் கிடையவே கிடையாது. ‘அவர்கள் பெரிய புண்ணிய ஸ்தலங்களைக் கட்டுவார்கள். அவர்கள் பீடங்களை பளபளப்பாக்குவார்கள். அவர்கள் டாக்டர் பட்டங்களைப் பெற்றிருப்பார்கள், அவர்கள் மிகவும் சரியாக உயர்தர ஆங்கிலம் பேசுவார்கள். மிகவும் உயர்தரமான வார்த்தை களைப் பேசுவார்கள். அவர்கள் அழகான இதையும் அழகான அதையும் கொண்டு இருப்பார்கள்.’ அதை தான் உலகம் இன்று கூறுகிறது. ஆனால் வேதமோ கூறுகிறது... இயேசு தாமே, ‘உலகத்தின் முடிவுபரியந்தம் விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். என் நாமத்தினாலே, அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்’ என்றார். அல்லேலூயா. அது தான் சுவிசேஷ சபை. அவள் கேலி செய்தாள். அவள் தன்னுடைய விரல்களை இவளை நோக்கி நீட்டி, ஏளனமாக அழைத்தாள். ஆனால், ‘பயப்படாதே, உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்: இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்’ என்றார். 83. அணுகுண்டுகளும் மற்ற யாவுமே சுற்றிலும் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு நாளில் வாழ்ந்து வருகிறோம். அல்லேலூயா. நான் பரிசுத்தாவியினாலே அடையாளங்க ளோடும் அற்புதங்களோடும் மற்றும் அந்தக் கன்மலையில் கட்டப்பட்டு, நீங்கள் கண்டிராத ஒரு வீடு நமக்குண்டு என்ற நிரூபணத்தோடும் தேவனுடைய இராஜ்யத்தில் முத்திரையிடப்பட்டிருப்பதற்காக நான் இன்று சந்தோஷமாயிருக்கிறேன். ஆமென். அப்படியானால் உங்களை (அவ்வாறு) அழைப்பது... அவர்கள் அதை பிசாசுகள் என்று அழைக்கிறார்கள், ஏனென்றால் பிசாசுகள் என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. அவ்வண்ணமே அந்த பரிசேயர்களும் முதுகைத் திருப்பி, இயேசுவை பிசாசு என்று அழைத்தனர், ஏனென்றால் அவர் அசுத்த ஆவிகளைத் துரத்தி வியாதியஸ்தர்களைச் சுகமாக்கிக் கொண்டிருந்தார். நீங்கள் தூஷணம் செய்கிறதாக இயேசு கூறினார், ஏனென்றால் ‘அவர் ஒரு பிசாசு’ என்று நீங்கள் சொன்னீர்கள். அவர் வியாதியஸ்தர்களைச் சுகமாக்கிக் கொண்டிருந்த போது, அவர், ‘சாத்தான் எப்படி சாத்தானைத் துரத்த முடியும்? சாத்தான் சாத்தானைத் துரத்தினால், அவனுடைய இராஜ்யம் பிளவுபட்டிருக்குமே’ என்றார். 84. ‘நான் சாத்தானைத் துரத்தினால், அது தேவனுடைய விரலினால் தான் என்று நாம் அறிய வேண்டும்’ என்றார். தேவனுடைய விரல். அப்படியானால் பிசாசு, தேவனுக்கு எவ்வளவு சிறியவனாயிருக்கிறான். அவருடைய விரலைக் காட்டிலும் பெரியவனல்ல. சும்மா அவருடைய விரலினாலே மெல்லத் தட்டியே அவனைத் தூக்கி வீசி எறிந்து விடுகிறார். ஒரு பிசாசைத் துரத்துவது என்பது தேவனுக்கு அவ்வளவு தான். அது சரியே. அவர், ‘நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறேன்’ என்றார். ஓ, என்னே, அவருடைய விரலை கொண்டு, ‘அப்பாலே போ, பிசாசே’ என்று கூறுகிறார். அங்கே அதற்குத் (தேவையானது) எல்லாம் அவ்வளவு தான். அவ்வளவு தான். ஆமென். தேவனுடைய விரலினாலே துரத்தி விடுகிறார். ஓ, என்னே, வெறுமனே தேவனுடைய ஒரு விரலினாலே... ஆனால் அதைக் குறித்து தேவன் கருதுவது எல்லாம் அவ்வளவு தான், அவருடைய விரலைக் கொண்டே ஒரு பிசாசை வெளியே தள்ளி விடுகிறார். அது வெறுமனே மிக எளிதாக இருக்கிறது. 85. ஆனால் வழிதவறிப் போன அந்த ஆட்டின் பின்னே அவர் போன போது அதைக் கவனியுங்கள். அது அவருடைய விரலைக் கொண்டல்ல; அவர் வழிதவறிப் போன ஆட்டைத் தூக்கி தம்முடைய தோள்களின் மேல் வைக்கிறார். அல்லேலூயா. இழக்கப்பட்டுப் போய், வழியை விட்டு விலகி, தெய்வ பக்தியற்ற சடங்காசாரமான இடங்களிலும், அங்கே வெளியே பாலைவனத்திலும் வனாந்தரத்திலும் இருக்கிற, ஒரு ஆட்டிற்காக அவர் எவ்வளவு அக்கறையுள்ளவராயிருக்கிறார். அவர் போய் அவனை எடுத்து, தம்முடைய தோளின் மேல் வைத்து, அவனை பரிசுத்த ஆவியினால் முழுவதுமாக நிறைத்து, மறுபடியும் அவனை மந்தைக்கு அனுப்பி வைக்கிறார். இயேசுவுக்கு பிசாசு அதற்கு அதிகமான எதுவும் அல்ல; அவர் தம்முடைய விரலைக் கொண்டு அவனை வெளியே உதைத்து தள்ளி விட்டு, முன்னே செல்கிறார். ஆனால் இழக்கப்பட்டுப்போன ஆட்டின் விஷயத்தில், அவர் போய் அவனைத் தேடிக் (கண்டு பிடித்து), தம்முடைய தோளின் மேல் அவனைக்கிடத்தி, இவ்விதமாக அவனுடைய கால்களைப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார். ஏறக்குறைய ஒரு மனிதனுடைய மிகவும் பலம்பொருந்திய பாகம் அவனுடைய தோள்கள் தான். உங்களுக்கு அது தெரியும். தம்முடைய கழுத்து மற்றும் தம்முடைய தோள்களைச் சுற்றிலும் அதைக் கிடத்தி, இதோ அவர், அவனை வனாந்தரத்தினூடாக சுமந்து கொண்டு வருகிறார். 86. சகோதரனே, அந்த சின்னஞ்சிறிய ஆட்டுக்குட்டி அங்கே படுத்துக்கொண்டு, சுற்றும் முற்றும் நோக்கியபடி, ‘ஹ-ஹ-ஹ-ஹ-ஹ’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்தச் சிறு ஆட்டுக்குட்டி இவ்வாறு பாடுவதைக் கேட்பதாக என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, ஆச்சரியமான கிருபை! அதன் தொனி எவ்வளவு இனிமை, என்னைப் போன்ற ஈனனை அது இரட்சித்தது! ஒருகாலத்தில் காணாமற்போனேன், இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டேன், குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன். அந்த எஜமானின் தோள்களில் படுத்துக் கொண்டு அந்த மந்தைக்குள் போய்க் கொண்டு இருக்கிறது... ஓ, ஆச்சரியமான கிருபை என்று அவனால் பாட முடிகிறது, அப்படி ஆனால், அவனால் அவ்வாறு பாட முடியாதா? அது உண்மை. ஆம், ஐயா, எஜமான் அவனைத் தம்முடைய தோள்களின் மேல் சுமந்து கொண்டு திரும்பி வருகிறார். 87. இப்பொழுது, பிறகு நாம் இங்கே கவனிக்கிறோம், நம்முடைய கதாபாத்திரமாகிய அவனுக்குள், அவன் சரியாக ஒரு பக்தியுள்ள பிசாசாக இருந்தான். அவன் ஓடோடிச் சென்று, கீழே விழுந்து இயேசுவைப் பணிந்து கொண்டான். இப்பொழுது, நீங்கள், ‘நான் இயேசுவைத் தொழுதுகொள்வேன் என்றால், நான் சரியாகத்தானே இருக்கிறேன்’ என்று கூறலாம். ஒரு நிமிடம் பொறுங்கள். இந்தப் பிசாசு இயேசுவைப் பணிந்து கொண்டு, (நிச்சயமாக அவன் அவ்வாறு செய்தான்), அவரை வெளியரங்கமாய் அறிக்கை பண்ணி, ‘நீர் யாரென்று நான் அறிவேன். நான் உம்மைக் குறித்து சாட்சி கொடுக்கிறேன், நீர் தேவனுடைய குமாரன், உன்னதமான தேவனுடைய குமாரன்’ என்றது. கவனியுங்கள், அவன் அவருக்கு ஒரு-ஒரு ஆணையிட்டான். உடனே அவன், ‘(தேவன் பேரில்) உமக்கு ஆணை’ என்றான், பிசாசு தான் அவ்வாறு சொன்னான். தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பேச விரும்புகிற இந்த மனிதர்களில் சிலரைக் கவனியுங்கள். அவர்கள், ‘ஓ, ஜீவனுள்ள தேவனாலே நான் இந்தக் காரியங்களை அறிவேன்’ என்கின்றனர். பாருங்கள்? ‘என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு ஜீவனுள்ள தேவன் பேரில் உமக்கு ஆணை.’ காரியம் அவ்விதமாகத்தான் இருக்கிறது. 88. இயேசு அவனைப் பார்த்து, ‘அசுத்த ஆவியே, இவனை விட்டு வெளியே வா (அது உண்மை)’ என்றார். இப்பொழுது கவனியுங்கள், பிசாசு அவனை ஒரு நல்ல சபை வீடாக வைத்திருந்தான், எனவே அந்த தேசத்தை விட்டுப் போக அவனுக்கு விருப்பம் இல்லை. அது வாசம் பண்ண நல்லதொரு இடமாக இருந்தது. அங்கே அந்த இடத்தைச் சுற்றிலும் அவன் வாசம் பண்ண விரும்பினான். எனவே அவனை நல்லதொரு வீடாக வைத்திருந்து, அங்கே குடியேறி வாசம் பண்ணினான். எனவே அந்த இடத்தை விட்டுப் போக அவனுக்கு சற்றும் விருப்பமில்லை. பிசாசுகள் அவ்விதமாகத்தான் இருக்கின்றன: அவைகள் ஒரு கூட்டம் ஜனங்கள் மத்தியில் ஒரு முறை குடியேறி விட்டால், அவைகள் அங்கிருந்து போக விரும்பாது. அது உண்மை. ஓ, அவைகள் பிடிவாதமாக இருந்து, ‘இப்பொழுது, தெய்வீக சுகம் அளித்தல் போன்ற அப்படிப்பட்ட எந்தக் காரியத்திலும் எனக்கு நம்பிக்கையில்லை. அவ்விதமான காரியங்களை நான் நம்ப மாட்டேன்’ என்று கூறுகின்றன. நிச்சயமாக அதை நம்பவே மாட்டீர்கள், பிசாசு தான் உங்களை அவ்வாறு செய்ய வைக்கிறான். 89. இல்லை, அங்கிருந்து போக அவனுக்கு விருப்பமில்லை. அவன், ‘நல்லது... அவனுக்குப் போக விருப்பமில்லை’ என்றான்,... என்று கூறினான். அப்போது இயேசு, ‘அவனை விட்டு வெளியே வா’ என்றார். 90. நல்லது, அவன், ‘இப்பொழுது, நான் கட்டாயம் வெளியேற வேண்டுமானால், நான் அங்கேயிருக்கும் அந்த ஒரு கூட்டம் பன்றிகளுக்குள் போகட்டும்’ என்றான். என்னே, எனவே அவைகள் அங்கு சென்று அந்தப்பன்றிக் கூட்டத்துக்குள்போயின. கவனியுங்கள், ஒரு மனிதனுக்குள் 2000 பிசாசுகள் இருந்தன. அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், ஒரு மனிதனுக்குள் இரண்டாயிரம் பிசாசுகள். உடனே அந்தப் பன்றிகள் அந்த மலையை விட்டுக் கீழே ஓடின. அனேக ஜனங்களைப் பார்க்கிலும் அவைகளுக்கு மேலான அறிவு இருந்தது. முழுவதும் பிசாசுகளால் நிறையப்பட்ட ஒரு மனிதன், அவன் சபைக்குப் போய், ‘ஏன், இவை எல்லாம் எதைப் பற்றியது என்று எனக்குத் தெரியும்’ என்று கூறுகிறான். ஆனால் கடலிலே பாய்ந்து, தன்னைத் தான் மூழ்கடித்து, கடலில் அமிழ்ந்து மாண்டு போக அந்தப் பன்றிக்கு போதுமான மரியாதை இருந்தது. கர்த்தருடைய வழியை விட்டு வெளியே போகும் படியாக, அந்தப்பன்றி கீழ் நோக்கி கடலுக்குள் ஓடி, தன்னைத் தான் மூழ்கடித்து அமிழ்ந்து மாண்டது (அது உண்மை-). 91. அந்த வழியிலேயே நிலைத்திருக்க அந்தப் பன்றிக்கு விருப்பமில்லை. அநேக ஜனங்கள் கர்த்தருடைய வழியில் நிலைத்திருக்க விரும்புகிறார்கள். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அந்தப் பிசாசுகள், அவைகள் அவ்வாறு செய்த போது, அவைகள் அத்தேசத்திலேயே தங்கியிருக்க விரும்பின. அந்த ஜனங்கள், அவர்கள் வெளியே வந்த போது... அந்த ஜனங்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் வெளியே வந்து, இந்தச் சத்தம் அங்கிருந்து கேட்ட போது, இந்த மனிதனோ புத்தி தெளிந்த நிலையில் இருந்தான். என்னே, அந்த மனிதனுக்குப் புத்தி தெளிந்திருந்ததாக வேதாகமம் கூறுகிறது. நான் இதை உங்களுக்குக் கூறுகிறேன்: நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்று, கிறிஸ்து உங்களுக்குள் இருக்கும் போது தான் நீங்கள் புத்தி தெளிந்த நிலையில் இருக்கிறீர்கள். அவன் தொழுது கொள்ளும்படி தன்னுடைய சரியான மன நிலையில் இருந்தான். அவன் அப்போது எங்கேயிருந்தான் என்று பாருங்கள். அவன் இயேசுவின் பாதத்தண்டையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அல்லேலூயா. உட்காருவதற்கு என்னவொரு அற்புதமான இடம் - அவன் வஸ்திரம் தரித்திருந்தான்- அவன் வஸ்திரம் தரித்து, புத்தி தெளிந்த நிலையில், இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, தொழுது கொண்டான் (அல்லேலூயா.), ஏனென்றால் அவர் அந்தப் பிசாசுகளைத் துரத்தி விட்டிருந்தார். 92. அவன், ‘இப்பொழுது, நான் என்ன செய்தேனோ, உங்களாலும்கூட அதைச் செய்ய முடியும்’ என்றான். கிறிஸ்து இயேசுவுக்குள் தன்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளாத சபை என்னவொரு பரிதாபகரமான நிலையில் உள்ளது. ஆம், ஐயா. பிறகு இதோ எல்லா சபை அங்கத்தினர்களும் அங்கே வெளியே வருகிறார்கள். அவர்கள் வெளியே வந்து, ‘எங்கள் பன்றிகள் எங்கே?’ என்று கேட்டார்கள். நல்லது, போய் தங்களைத் தாங்களே மூழ்கடித்து மாண்டு போகும்படியாக போதுமான கண்ணியத்தை அவைகள் எல்லாம் கொண்டிருந்தன. அவர்கள், ‘எங்கள் நாட்டை விட்டு வெளியே போங்கள். இவ்விதமான ஏதாகிலும் ஒன்றை நாங்கள் விலை கொடுக்கப் போவதாக இருந்தால், இந்தப் பணமெல்லாம் எங்களுக்கு செலவாகப் போவதாக இருந்தால், அவ்விதமான ஒரு எழுப்புதல் எங்களுக்கு அவசியமில்லை’ என்றனர். நான் மகிமையை அடையும் போது... நான் மகிமைக்குப் போகும் போது, அவனுடைய சாட்சி அந்த பன்றி வளர்ப்பவர்களிடத்தில் எவ்வளவு - என்னவொரு விளைவை ஏற்படுத்தியது என்பதைக் காண விரும்புகிறேன். அவன் அங்கே திரும்பிச் சென்ற போது, அவன் அந்தப் பன்றி வளர்ப்பவர்களை கலக்கமடையச் செய்திருப்பான் என்று நான் கற்பனை பண்ணிப் பார்க்கிறேன் (ஆம், ஐயா). அவன் அங்கே தன்னுடைய சரியான மனநிலையில் இருந்தான். அத்தேசத்து ஜனங்கள் அன்பு நிறைந்த இயேசு-வோடு இருப்பதைக் காட்டிலும் அந்தப் பன்றிகளோடும் பிசாசுகளோடும் தாங்கள் வசிக்கும் இடத்தில் இருப்பதையே அதிக சுகமாக உணர்ந்தார்கள். எனவே அவர்கள் அத்தேசத்தை விட்டு அவரை வெளியே போகச் செய்தார்கள். அவர்கள் பிசாசுகளோடும் அந்தப் பன்றிகளோடும் தாங்கள் வசிக்குமிடத்தில் இருப்பதையே அதிக சமாதானமாய் உணர்ந்தார்கள். 93. இன்றும் அதே விதமாகத்தான் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். ஒரு மனிதன் தான் சத்தமிடுவதற்கோ அல்லது வேறு ஏதோவொன்றைச் செய்வதற்கோ, சபைக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுப்பதற்கோ, அல்லது இதைப் போன்ற சிறிய ஏதோவொன்றைக் கொடுப்பதற்கோ, அல்லது ஒருக்கால் தன்னுடைய விசுவாச அறிக்கையை செய்வதற்கோ, எழுந்து நின்று தேவனை ஸ்தோத்தரிப்பதற்கோ, அல்லது அந்நிய பாஷைகளில் பேசுவதற்கோ போதுமான மார்க்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியவனாய் இருக்கப் போகிறான் என்று எண்ணிக் கொள்வான் என்றால், இன்னும் சரியாகச் சொல்லுவோமானால், அவன் ஒருபோதும் மார்க்கத்தைக் குறித்து கேள்விப்பட்டிருக்கவே இல்லை. அவர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தோடும், பின்தொடருகிற அடையாளங்கள் அற்புதங்களோடும் அன்பான இயேசு கிறிஸ்துவோடு இருப்பதைக் காட்டிலும் பிசாசோடும் தங்கள் பணத்தோடும் தாங்கள் இருக்கும் இடத்தில் இருப்பதையே அதிக சௌகரியமாக உணருகிறார்கள். ஆமென். வியூ. என்னே, நான் பக்தி பரவசமாக உணருகிறேன். ஆம், ஐயா. ஓ, அல்லேலூயா. அந்தக் காரியத்தை நான் ஒதுக்கித் தள்ளி விட்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். தேவனுக்கு மகிமை. எனக்கு கிறிஸ்துவையே கொடுங்கள். ஆமென். அவரை ஆராதிக்கும்படியான சிந்தையில் என்னை உடுத்துவியுங்கள். அவரை எவ்வாறு ஆராதிப்பது? ஆவியோடும், சத்தியத்தோடும். ஆமென். கர்த்தாவே, நான் நடந்து சென்று, ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியிடம் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் என் மேல் வருவாரானால், நான், ‘அல்லேலூயா’ என்று உரக்க சத்தமிடுவேன். எனக்கு அதைக் குறித்து கவலையில்லை, நிச்சயமாக இல்லை. 94. கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் இங்கே இந்தியானாவிலுள்ள கேரியில் நின்று கொண்டிருந்தேன். அங்கே அந்த மகத்தான பெரிய ஆலைகளில் ஒன்று இருந்தது, அங்கு தான் அவர்கள் அந்த எஃகு எல்லாவற்றையும் உற்பத்தி செய்கிறார்கள். அவர்கள் என்னை சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர், ‘இப்பொழுது’ என்றார், அவர், ‘டாக்டர். பிரன்ஹாம் அவர்களே, இது எவ்வாறு செய்யப்படுகிறது என்று நான் உமக்குக் காண்பிக்கிறேன்’ என்றார். அவர் அங்கிருந்த ஒரு மகத்தான பெரிய இடத்திற்கு என்னை மேலே அழைத்துச் சென்றார். நான் ஏதோவொரு விதமாகக் காணப்படுகிற உபகரணங்கள் பொருத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். மேலும் நான்... ஒரு சிறிய விசில் ஊதப்பட்டது, அப்போது ஒவ்வொருவரும் வேலை செய்வதை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் ஒரு சிறிய துடைப்பத்தை எடுத்து, இவ்விதமாக வெளியே நடைபாதையின் மத்தியில் பெருக்கிக் கூட்டினார்கள். நான், ‘அவர்கள் எதற்காக அவ்வாறு செய்கிறார்கள்?’ என்று கேட்டேன். 95. அவர், ‘நான் சில நிமிடங்களில் ஒரு காரியத்தை உமக்குக் காண்பிப்பேன்’ என்றார். எனவே அவர் குப்பைகள் எல்லாவற்றையும் வெளியே நடைபாதையில் பெருக்கிக் கூட்டினார். பிறகு வேறொரு விசில் சற்று ஊதப்பட, அவர்கள் எல்லாரும் சென்றனர். அவர் ஒரு சிறு பொத்தானை அழுத்தினார், உடனே இதோ ஒரு மகத்தான பெரிய காந்தம் வருகிறது, அது இவ்விதமாக பேரொலி எழுப்பியபடி, முழங்கி, முழங்கி, முழங்கி, முழங்கி, முழங்கியவாறு கீழே வந்து, கீழே நடைபாதையில் பாய்ந்து வந்தது. அது இவ்விதமாக கீழே அந்த நடை பாதைக்கு குறுக்கே இறங்கி வருகையில், ஏறக் குறைய அந்தக் குப்பைகள் எல்லாமே அந்தக் காந்தத்தை நோக்கி மேலே சென்று, அதில் ஒட்டிக் கொண்டன, பிறகு அது தொடர்ந்து வெளியே போனது, அவர் அதனுடைய காந்தத் தன்மையை அதை விட்டு நீக்க, அவை மறுபடியுமாக உருக்கி வார்ப்பிக்கப்படும்படி எரிகலனில் வந்து விழுந்தன. அவர், ‘உமக்கு இது பிடித்தது எப்படி?’ என்று கேட்டார். நான், ‘அல்லேலூயா. அல்லேலூயா’ என்றேன். அவர், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார். ஓ, நான், ‘நான் அப்படியே ஒரு காரியத்தைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்’ என்றேன். அவர், ‘நீர் ஏதோவொன்றைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்’ என்றார். நான், ‘நான் ஒன்றைக் குறித்து சிந்தித்துப் பார்த்தேன்’ என்றேன். அவர், ‘நீர் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். 96. நான், ‘அதோ அங்கே மகிமையில் வீற்றிருக்கிற ஒரு மகத்தான காந்தத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அல்லேலூயா. இந்நாட்களில் ஒன்றில்,’ ‘அநேகமாக இப்பொழுதே அவர் வருவதை நான் கேட்கிறேன். அவர் இறங்கி வரப் போகிறார், இந்தப் பழைய அழிந்து போகக் கூடிய இந்த சரீரம்; அவர் அதை மேலே எடுத்து, அதோ அங்கே அதை வெளியே கொண்டு சென்று, அதை உருக்கி வார்ப்பிக்கப் போகிறார்’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அல்லேலூயா. ஆம், ஐயா. நான், ‘ஐயா, நான் ஒரு காரியத்தை உம்மிடம் கேட்க விரும்புகிறேன். அந்த குப்பைகள் எல்லாமே ஏன் போகவில்லை?’ என்றேன். அவர், ‘அவைகளில் சில அலுமினியமாக உள்ளன. அவைகளை காந்தம் கவர்ந்து இழுத்துக் கொள்ளாது’ என்றார். நான், ‘அல்லேலூயா. அப்படியானால் அந்த இரும்புத்துண்டு ஏன் போகாமல் அங்கேயே இருக்கிறது’ என்றேன். அவர், ‘நீங்கள் பாருங்கள், அது போல்ட் கொண்டு இறுக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்தார். நான், ‘அல்லேலூயா’ என்றேன். 97. சகோதரனே, ஒவ்வொரு விலங்கிலிருந்தும், ஒவ்வொரு கௌரவத்திலிருந்தும், நீங்கள் பெற்றிருக்கிற ஒவ்வொன்றிலிருந்தும் நான் கட்டவிழ்க்கப்பட்டிருப்பதற்காக நான் சந்தோஷமாயிருக்கிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களை நீங்களே இழந்து விடுங்கள்; மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியால் நிறையப்பட்டு, அவருடைய வல்லமையினாலே (காந்தம்) போல இழுக்கப்படுங்கள், அல்லேலூயா, அவர் வரும் போது நான் அவரோடுகூட போவேன். நான் பவுலைப் போல, ‘அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நான் அவரை அறிந்திருக்கிறேன், மரித்தோரின் மத்தியிலிருந்து அவர் அழைக்கிற போது, நான் அவர்கள் மத்தியிலிருந்து வெளியே வருவேன். பின்னானவைகளை விட்டு விட்டு, கிறிஸ்துவுக்குள் பரம அழைப்பின் இலக்கை நோக்கித் தொடருகிறேன்’ என்று கூறவே விரும்புகிறேன், உலகத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, அவர்களுடைய வேத சாஸ்திரங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு விட்டேன். நான் கிறிஸ்துவையே காண்கிறேன், அவரை மாத்திரமே காண்கிறேன். ஆமென். நான் நேராக கல்வாரியை நோக்கிப் பார்த்தவாறு, தொடர்ந்து நடந்து செல்கிறேன். ‘ஏய், பில்லி பிரன்ஹாம் ஒரு பரிசுத்த உருளை என்று உனக்குத் தெரியுமா?’ என்று கூறலாம். நான் அதைக் கேட்கக் கூட மாட்டேன். நான் அப்படியே தொடர்ந்து நடந்து செல்கிறேன். அது உண்மை. அதோ அங்கேயுள்ள பரம அழைப்பின் இலக்கை நோக்கித் தொடருகிறேன். ‘உனக்குத் தெரியுமா, அந்த ஆள் ஒரு ஆவி உலக இடையீட்டாளர் (medium) என்று நம்புகிறேன்’ என்று கூறலாம். அது என்னை ஒரு சிறிதும் தொல்லைப் படுத்துவதில்லை. நான் அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறேன். ‘நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன். நான் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார் என்று நிச்சயித்தும் இருக்கிறேன்.’ அல்லேலூயா. அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கிறேன். 98. ஆமாம், அங்கே வெளியே இருந்த அந்த வயதான ஆட்கள், அந்தப் பன்றிகள் எல்லாவற்றோடும் தாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருப்பதையே நலமாக உணர்ந்தார்கள், அவர்களுடைய பன்றிகளும், சேறு நிறைந்த (பன்றித்) தொழுவங்களும் சுற்றிலும் இருப்பதையும், அவர்களைச் சுற்றி முழுவதும் பிசாசுகளும் மற்றும் அதைப் போன்ற யாவும் இருப்பதையுமே நலமாக உணர்ந்தார்கள். இயேசு அங்கே இருந்த போது அவர்கள் சௌகரியமாக உணர்ந்ததைக் காட்டிலும், (இதையே) அவர்கள் அதிக சுகமாக (சௌகரியமாக) உணர்ந்தார்கள். ஏன், நீங்கள் இன்று ஒரு பெரிய சடங்காசாரமான சபைக்குப் போய், அங்கே உள்ளே வந்திருக்கும் இரண்டு மூன்று பேர் தேவனைத் துதித்து, சத்தமிட்டு, அவ்விதம் தொடர்ந்து செய்து, ஒருக்கால் யாரோ ஒருவர் அந்நிய பாஷைகளில் ஒரு செய்தியைக் கொடுக்க அல்லது யாரோ ஒருவர் தேவனுடைய வல்லமையினாலே சுகம் பெறவோ, அல்லது தேவன் ஒரு தரிசத்தைக் கொடுக்கவோ அனுமதித்துப் பாருங்கள், ஏன், அவைகள் அவர்களை அப்படியே மரணத்திற்கேதுவாய் உறையச் செய்து விடும். ‘என்னே, அவ்விதமான எதுவும் சூழ்ந்திருக்க எனக்கு - எனக்கு விருப்பமில்லை.’ பாருங்கள்? அன்பான இயேசு சூழ்ந்திருப்பதைக் காட்டிலும் பிசாசுகளோடிருக்கும் வீடே நல்லதாக (அவர்களுக்கு) இருக்கிறது (அது உண்மை). நீங்கள் அவ்விதமாக அவர்களுக்குப் பிரசங்கிக்கலாம், அவர்கள் ஊறுகாயின் மேல் இருக்கும் ஒரு பாலுண்ணியைப் போன்று அப்படியே அவர்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு புளிப்பாகவும் குளிர்ந்து போயும் இருப்பார்கள். ‘ஆமென்’ என்று யாருமே கூறமாட்டார்கள், அல்லது எதுவுமே கூறாமல், அப்படியே அங்கேயே உட்கார்ந்து குளிர்ந்து போய் உறைந்து போயிருப்பார்கள். ஓ, என்னே. ‘அவர் இங்கிருந்து போக வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அவன் இப்பொழுது 15 நிமிடங்களாக அங்கே அவ்வாறு இருக்கிறான். ஆ, அவன் எப்போது நிறுத்தப் போகிறான்?’ 99. ஓ, என்னே, உங்களுடைய செரிமான ஒழுங்குகள் சரியாக இல்லை. அது சரியே. சகோதரனே, அவர்கள் மனந்திரும்பி சுவையான ஆகாரம் புசிக்கும் ஒரு மகத்தான பெரிய யூபிலியைக் கொண்டிருக்க விரும்புகிறேன், நீங்களும் அவ்வாறு விரும்பவில்- லையா? ஆமென். தேவனுடைய முழு வார்த்தையையும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தூதன் யோவானிடம் வேதாகமத்தைக் கொடுத்து, ‘இதைப் புசி’ என்றான். அவன் அதைப் புசிக்கும் போது, அது புசிக்கக் கசப்பாகவும், ஆனால் அது அவனுடைய வயிற்றில் போன பிறகு, அவனுடைய வயிற்றில் அது மதுரமாகவும் இருந்ததாக அவன் கூறினான். அல்லேலூயா. நேரம் என்ன ஆகிறது என்று கூறுங்கள். நான் நேரத்தைக் கடந்து விட்டேனா, அப்படியா? அல்லேலூயா. சரி. லேகியோனுக்குப் புத்தி தெளிந்த பிறகு என்னால் அவனைக் காண முடிகிறது. அவன் சுகமடைந்து விட்டான். அவன் இயேசுவை நோக்கி தன்னுடைய கைகளை அசைத்துக் கொண்டேயிருந்த பிறகு, என்னால் அவனைக் காண முடிகிறது, பிசாசுகளாகிய அந்த ஜனங்கள் இறங்கி வந்து, ‘நீ இங்கே சுற்றிலும் இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை; எங்களுக்குப் பன்றிகள் தான் வேண்டும். எங்களுடைய பன்றிகளைத் தான் நாங்கள் அதிகம் விரும்புகிறோம். அதைப்போன்ற அப்படிப்பட்ட ஒரு எழுப்புதலும், இங்கேயுள்ள இந்த எல்லா முட்டாள்தனங்களும், தெய்வீக சுகமளித்தலும் எங்களுக்கு வேண்டாம். அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன என்பது எங்களுக்குத் தெரியும். அந்த மனிதன் உணர்ச்சியைக் கிளறிவிடுபவன் மட்டுமே. இப்பொழுது, எங்கள் நாட்டை விட்டு வெளியே போ. அந்தப் பரிசுத்த உருளையனுடைய காரியத்தை இங்கே ஆரம்பிக்க எங்களுக்கு விருப்பமில்லை’ என்றனர். 100. இயேசு அங்கு தங்கியிருக்க மாட்டார்; கவலைப்பட வேண்டாம். அவர் வரவேற்கப் படாத இடத்தில் அவர் தங்கவே மாட்டார். அவர் அப்படியே தம்முடைய தலையைத் திருப்பி கீழேயிருந்த படகை (ship) நோக்கி நடந்து சென்றார், அவர்களிடம் ஒரு வார்த்தையும் கூறவேயில்லை... (சுகத்தைப்) பெற்றிருந்த, பழைய லேகியோன், ‘ஓ, அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஓ இயேசுவே, நானும் உம்மோடு கூட வரட்டும். ஓ, நானும் உம்மோடு வர விரும்புகிறேன். இந்த ஒரு கூட்டம் முட்டாள்கள் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை, அதைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை. கட்டியிருந்த கால்விலங்குகள் ஒவ்வொன்றையும் பின்னே விட்டு விட்டேன்; நான் உம்மைப் பின்பற்றி வரட்டும். நான் ஏதோவொரு காரியத்தைக் கண்டு கொண்டேன். நான் உம்மோடு வரட்டும்’ என்றான். இயேசு அவனைத் திரும்பிப் பார்த்து, ‘இப்பொழுது, நீ போய் உனக்கு என்ன சம்பவித்தது என்பதை உன்னுடைய பெற்றோர்களிடம் சொல்லு’ என்றார். என்னே. ‘போய், சாட்சி கூறு.’ அவன் திரும்பிப் போன போது, அவன் அந்தப் பன்றி வளர்ப்பவர்களிடம் என்ன கூறி இருப்பான் என்று நான் சற்றே வியப்படைகிறேன். அந்தச் சிறிய பழைய படகு அவனுடைய பார்வையை விட்டு மறைவது வரைக்கும், அவனால் அதைக் காணக் கூடிய தூரம் வரையில் அவன் அப்படியே கையசைத்துக் கொண்டே, ‘நான் ஏதோ ஓரு நாளில், அவரை மீண்டும் காண்பேன்’ என்றான். 101. பிறகு அவன் தெருவில் போவதை என்னால் காண முடிகிறது. அவர்களில் சிலர், ‘நல்லது, அங்கே போய்க் கொண்டிருக்கிற அந்த ஆள் யார்?’ என்று கேட்கிறார்கள். அவன், ‘மகிமை, அல்லேலூயா’ என்கிறான். அவர்கள், ‘அந்த ஆள் இன்னும் பைத்தியம் பிடித்த நிலையில் தான் இருக்கிறான். அதோ அவன் போகிறான்’ என்றார்கள். அவன் தெருவில் சென்று, ‘ஓ, அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ என்று கூறுகிறான். நல்லது, அவர்கள், ‘அதைப் பற்றி ஒரு காரியம் இருக்கிறது: அவன் கொஞ்சம் வஸ்திரங்களை உடுத்தியிருக்கிறானே. நிச்சயமாக அவனுக்கு ஏதோ சம்பவித்து இருக்கிறது’ என்றார்கள். 102. அவன் அங்கு போவதை என்னால் காண முடிகிறது, இதோ அந்த சம்பவம். அவன் சுற்றும் முற்றும் நோக்கிப் பார்ப்பதை என்னால் காண முடிகிறது. ‘நல்லது, அந்நாட்டு தலைவன் அவனுடைய மனைவியை வெளியே அனுப்பி வைத்திருந்தான். அங்கே எந்த...வும் இல்லை. அவனுடைய பரிதாபமான இளம் மனைவி, அவன் சுகமடைய வேண்டுமென்று ஒருக்கால் எல்லா நேரமும் ஜெபித்திருப்பாள். அவன் திரும்பி வருகிற போது, அவனுடைய சிறு பிள்ளைகள், அவன் வருவதைப் பார்க்கும் போது, அவர்கள் ஓடிச்சென்று மறைந்து கொள்வார்கள், மற்றும் எல்லாவற்றையும் செய்வார்கள். அவனுடைய பரிதாபமான இளம் மனைவியும் அந்த பாதையை விட்டு வெளியே போக வேண்டியிருந்தது, ஏனென்றால் அவன் மோசமானவனாக இருந்தான். அவன் உள்ளே வந்து, அந்த இடத்தையே சுக்குநூறாக உடைத்தெறிந்து விடுவான். ஒரு குடிகாரனோ அல்லது பிசாசு பிடித்தவனோ அவ்விதமாகத் தான் செய்கிறான்: அவன் இந்த கோப வலிப்புகளில் ஒன்றால் ஆட்கொள்ளப்பட்டு, வீட்டைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் உதைத்து எறிந்து விடுவான். நீங்கள் உங்களைக் குறித்தே வெட்கப் பட்டாக வேண்டும், சபையைச் சேர்ந்தவர்களும் கூட, ஒருக்கால் டீக்கன் வாரியத்தில் உள்ளவர்களும் கூட அவ்வாறு செய்கின்றனர். சகோதரனே, இன்று பிற்பகலில் அவர்களில் சிலரைக் கொண்ட சற்று பெரிய கூட்டம் ஒன்றைக் கொண்டிருக்க விரும்பினேன். அது சரி தான். ஆமாம், டீக்கன் வாரியத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அவ்விதமாக நடந்து கொள்ளுகிறார்கள். இதோ அவன்... உள்ளே வருகிறான். அவன் மெல்ல நழுவியபடி வந்த போதிலும், அந்த வீடு பூட்டிக் கிடந்தது. மனைவி எங்கே? அவன் வெளியில் சென்று, தெருவிலிருந்த யாரோ ஒருவரிடம் கேட்டான், ‘அவள் அங்கே அந்த சந்திற்கு இடம் பெயர்ந்து போயிருக்க வேண்டும்’ என்ற பதில் கிடைத்தது. 103. அங்கே ஒரு கூட்டம் பழைய தகர டப்பாக்களும் (tin cans) மற்றும் காரியங்களும் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அவன் போய், சுற்றும் முற்றும் பார்ப்பதை என்னால் காண முடிகிறது, அங்கே கொஞ்சம் புதர் செடிகள் ஒன்றாக வைத்து வேயப்பட்டு அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த ஒரு சிறு பழைய குடிசை இருந்தது, மேலும் அதோ அவள் பின்முற்றத்தில் இருந்து, ஒரு துணிச்சலவைக் கல்லின் மேல் துணிகளைத் தேய்த்துக் கொண்டிருந்தாள், ஒருக்கால் அண்டை வீட்டார்களின் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்திருப்பாள். அப்போது, அந்தச் சிறு பிள்ளைகள், ‘அம்மா, அம்மா, அதோ அவர் வருகிறார், அதோ அவர் வருகிறார்,’ என்று உரக்கக் கத்திக் கொண்டே, அவ்விதமாக அவர்களால் கூடியமட்டும் வேகமாக ஓடத் தொடங்கினார்கள். அவன், ‘இனிய இருதயமே, ஒரு நிமிடம் பொறு’ என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவனுடைய மனைவியோ, ‘ஓ, ஓ, ஓ’ என்று கூறுகிறாள். அவனோ, ‘இனிய இருதயமே, கொஞ்சம் பொறு, ஓடாதே. ஏதோவொன்று எனக்கு சம்பவித்து விட்டது’ என்கிறான். ஆமென். 104. அவன் உள்ளே நடந்து சென்று, அவனுடைய இளம் மனைவி உடுத்தியிருந்த உடையின் கந்தலான கைப்பாகத்தைப் பார்ப்பதை என்னால் காண முடிகிறது. அவனுடைய பரிதாபமான சிறு பிள்ளைகள் நடுநடுங்கியவாறு அங்கே நின்று கொண்டு இருக்க, அவன் தன்னுடைய கரத்தை அவர்களைச் சுற்றிலும் போடுவதைக் காண்கிறேன். ஒரு சிறு பையன் அடுத்த சிறு - சிறு பெண் பிள்ளையிடம், ‘அப்பாவுக்கு என்ன ஆயிற்று’ என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. தொடர்ந்து, ‘அம்மா, அம்மா, அப்பாவுக்கு என்ன-என்ன ஆயிற்று’ என்று கேட்கிறார்கள். அவனுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுவதை என்னால் காண முடிகிறது. அவன் தன்னுடைய கரங்களை (பிள்ளைகளின்) தாயைச் சுற்றிலும், அந்தச் சிறு பிள்ளைகளைச் சுற்றிலும் போட்டுக் கொண்டு, அவர்களைத் தூக்கி வைத்து, ‘இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். அப்பாவுக்கு என்ன ஆயிற்று என்று உங்களிடம் கூறப் போகிறேன். அப்பா, இயேசுவைச் சந்தித்தேன். அது தான் விஷயம். அப்பா இயேசுவைக் கண்டு கொண்டேன்’ என்று கூறுகிறான். அந்நாளில் அது லேகியோனுக்கு சம்பவித்தது போலவே, இன்றைக்கும் அப்பா அம்மா இருவருக்கும் அது சம்பவிக்கும். நீங்கள் இயேசுவைக் கண்டு கொள்ளும் போது, நீங்கள் ஒரு போதும் அதேவிதமாக இருக்க மாட்டீர்கள். லேகியோனால் ஒரு போதும் அதேவிதமாக இருக்க முடியவில்லை. இயேசுவை ஒரு விசை கண்டு கொண்ட எந்த மனிதனாலும் அதன் பிறகு ஒருபோதும் அதேவிதமாக இருக்க முடியாது. நாம் ஜெபிப்போம். 105. பிதாவே, இயேசுவின் நாமத்தில், இந்தப் பிற்பகலில் இங்கே இழக்கப்பட்ட ஒருவரோ, அல்லது வியாதிப்பட்ட ஒருவர் கூட இங்கே இருந்து, அவர்கள் இன்னும் ஒரு போதும் உம்முடைய மகத்தான சுகமளிக்கிற வல்லமையையோ, அல்லது உம்முடைய இரட்சிப்பின் கிருபையையோ சந்திக்காமல் (தொடர்பு கொள்ளாமல்) இருப்பார்களானால், இந்த இதே மணி வேளையில், அவர்கள் உம்மோடு தொடர்பு கொள்வார்களாக, நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிற எங்கள் பரலோகப் பிதாவே... கர்த்தராகியஇயேசு தாமே தம்முடைய கரங்களை விரித்து, உமது மகிமைக்காக இங்கே உள்ள ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். மேலும், கர்த்தாவே, இன்றிரவு இங்கே உள்ளே பரிசுத்த ஆவியானவரின் மகத்தான ஊற்றப்படுதல் இருந்து, இன்றிரவு மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப்பட வேண்டுமென்று ஜெபிக்கிறேன். நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கையில், உமது ஊழியக்காரனின் ஜெபத்தைக் கேட்டருளும். ஆமென். இப்பொழுது, ஆராதனையை சகோதரன்.மாட்சன்-போஸ் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கிறேன். நல்ல கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, உங்களை சுகத்தோடும் சந்தோஷத்தோடும் காத்துக் கொள்வாராக. இன்றிரவு உங்களைக் காண்பேன். சகோதரன் போஸ் அவர்கள்... வரைக்கும், ஒரு நிமிடம் அப்படியே உட்கார்ந்திருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.